ஞானகுரு பதில்
கேள்வி ; இயற்கை மருத்துவம் மீது நம்பிக்கை உள்ள மனிதர்களும் வீட்டு பிரசவத்தை எதிர்க்கிறார்களே..?
- ஜி.ராஜி, மதுரை.
ஞானகுரு ;
நாய், பூனை, ஆடு, மாடு போன்று பெண்ணாலும் எளிதாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பது உண்மை தான், அதற்காக மருத்துவமனையைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம் இல்லை. முன்பு மாட்டுவண்டியில் பயணம் செய்தார்கள் என்பதற்காக கார், பஸ் வந்த பிறகும் யாரும் மாட்டுவண்டியைத் தேடுவதில்லை.
முன்பு பெண் கடுமையான உடல் உழைப்பு கொடுப்பவராக இருந்தார். தண்ணீர் தூக்கிவருவது, தானியங்களை உரலில் போட்டு இடிப்பது, அம்மியில் மசால் அரைப்பது போன்ற எத்தனையோ பணிகள் செய்துவந்தார். அதனால் எளிதாக குழந்தை பெற்றுக்கொண்டார். இந்த உடல் உழைப்புகளில் இருந்து பெண் விடுதலை பெற்றுவிட்டார். எனவே, இந்த விஞ்ஞான யுகத்திலும் இயற்கை பிரசவம் என்று பெண்ணின் உயிருடன் விளையாடுவது அபத்தம். பிரசவத்தில் தாய், சேய் உயிரிழப்புகள் மருத்துவமனையாலே மிகப்பெரும் அளவு குறைந்துள்ளன. பெண் மற்றும் குழந்தையின் பாதுகாப்புக்கு மருத்துவமனையே நல்லது. இயற்கையை நம்பி ஏமாந்துவிட வேண்டாம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்
