• Home
  • சர்ச்சை
  • இந்து கோயில்களில் சாய்பாபாவுக்கு கெட் அவுட்?

இந்து கோயில்களில் சாய்பாபாவுக்கு கெட் அவுட்?

Image

இந்து முன்னணி தீவிரம்

இந்து கோயில்களில் எல்லாம் இப்போது சாய்பாபா சிலைகள் வைப்பதும், அங்கு வியாழக்கிழமை பெருமளவு கூட்டம் கூடுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால், இந்து கடவுள்களுக்கு மதிப்பும் மரியாதையும் குறைந்துவிடும் என்று இந்து முன்னணியினர் ஆரம்ப காலத்தில் இருந்து எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவையை சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ’’இஸ்லாமியராக பிறந்து, இஸ்லாத்தையும், இந்து மதத்தையும் போதித்த சாய் பாபாவுக்கு ஷீரடியில் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்திலும் பல சாய்பாபா கோயில்கள் அமைந்துள்ளன. இந்த நிலையில், ஆகம விதிகளுக்கு முரணாக தமிழகத்தில் பல இந்து கோயில்களில் சாய்பாபாவின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே, அந்த சிலைகளை அகற்ற அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் எதிர்காலத்தில் சாய் பாபா சிலைகள் அமைக்கப்படாது என்பதை உறுதி செய்யுமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

இந்த விஷயத்தை நீதிமன்றம் விட்டாலும் இந்து முன்னணியினர் விடுவதாக இல்லை என்று சொல்லப்படுகிறது. சாய்பாபா வழிபாடு இந்துக்களின் நோக்கத்தையும் பக்தியையும் சிதைத்துவிடும் என்கிறார்கள்.

பக்தியும் கெட்டுப் போச்சுப்பா.

Leave a Comment