தினமும் பிரியாணி சாப்பிடுங்க

Image
  • சூப்பரான மெடிக்கல் அட்வைஸ்

இன்று பிரியாணி இல்லாத உலகத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு தெருவுக்குத் தெரு பிரியாணிக் கடைகள் முளைத்திருக்கின்றன. சும்மா நடந்து செல்பவர்களுக்கும் ஆசையைத் தூண்டும் வகையில் கரண்டியால் டொக் டொக்கென்று தட்டி அழைக்கிறார்கள்.

குழம்பு, சைடீஸ் போன்றவை வாங்கவேண்டிய அவசியம் இல்லை என்பதால் நிறைய பேருடைய இரவு உணவாக பிரியாணி மாறிவிட்டது. அதுசரி, தினமும் பிரியாணி சாப்பிடலாமா…?

வீட்டில் செய்யும் பிரியாணியாக இருந்தால் கண்டிப்பாக தினமும் சாப்பிடுவதில் தவறு இல்லை. அதுவே ஹோட்டல் பிரியாணி என்றால் வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் எடுத்துக்கொண்டால் போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

வீட்டில் தினமும் சாப்பிடுவதாக இருந்தாலும் ஹோட்டலில் வாரம் இரண்டு நாட்கள் சாப்பிடுவது என்றாலும் குறைவாக சாப்பிடுவது முக்கியம். அதாவது அரை வயிறு சாப்பிட்டால் போதும்.

வீட்டில் செய்தது என்றாலும், பிரியாணியின் சுவை நன்றாக இருக்கிறது என்ற காரணத்துக்காக மூக்கு முட்ட சாப்பிடுவது தான் தேவையற்ற விளைவுகளை உருவாக்கிவிடும். நிறைய சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்து மறுபடி சூடுபடுத்தி சாப்பிடுவது மிகவும் ஆபத்து.

இரவில் பிரியாணி சாப்பிடுவது என்பது முடிவாகிவிட்டால் 8 மணிக்குள் சாப்பிட்டு முடிப்பது நல்லது. நள்ளிரவு பிரியாணி, அதிகாலை பிரியாணி என்றெல்லாம் சாப்பிட்டால் அது தூக்கத்திற்கும் ஜீரணத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும். அளவுக்கு மிஞ்சினால் பிரியாணியும் ஆபத்தே.