சீமான் பேச்சு, காமெடியாப் போச்சு.

Image
  • முன்னேறும் பா.ஜ.க., பின்னணியில் நாம் தமிழர்

கம்யூனிஸ்ட் கட்சியுடன் சவால் விட்டு தோல்வியை சந்தித்த சீமான் இப்போது மீண்டும் அண்ணாமலையுடன் சவால் விட்டு தோல்வியை சந்தித்திருக்கிறார். இதற்கு சீமான் என்ன செய்வார் என்பது கேள்வியாக மாறியுள்ளது.

இப்போது வரை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழகத்தைப் பொறுத்த வரையிலும் தி.மு.க. ரொம்பவே ஹேப்பி. அண்ணாமலை தோற்றுப் போவதைக் கண்டு சீனியர் பா.ஜ.க. தலைவர்கள் ரொம்பவே ஹேப்பி.

யார் தோற்றால் எனக்கென்ன செளமியா அன்புமணி மட்டும் எப்படியாவது ஜெயித்தால் போதும் என்று டாக்டர் ராமதாஸும், எப்படியாவது நீ மட்டும் ஜெயிச்சுடு கண்ணு என்று பிரேமலதாவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

அதேநேரம், எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை என்றாலும் நாம் தமிழர் தம்பிகள் ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்தாலும் நாம் தமிழர் தம்பிகள் மட்டும் திகிலில் இருக்கிறார்கள்.

ஏனென்றால், பா.ஜ.க.வை விட அதிக வாக்குகள் வாங்கிக் காட்டுகிறேன் என்று சீமான் சவால் விட்டிருந்தார். ஆனால், இப்போது கிட்டத்தட்ட 13 இடங்களில் பா.ஜ.க. இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. தஞ்சாவூர் தொகுதியில் மட்டுமே நாம் தமிழர் கட்சி இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. அதுவும் சொற்பமான வாக்கு வித்தியாசமே நீடிக்கிறது.

எனவே, இப்போதைய நிலவரப்படி பார்க்கும்போது இந்த தேர்தலில் பா.ஜ.க.வை விட நாம் தமிழர் கட்சி நிச்சயம் குறைவான வாக்குகளே வாங்கப் போகின்றன. ஆகவே, சொன்ன வார்த்தையைக் காப்பாற்றும் வகையில் நாம் தமிழர் கட்சியை சீமான் கலைத்துவிடுவாரா என்று சில தம்பிகள் கலக்கத்தில் நிற்கிறார்கள்.

ஆனால், சீமானைப் பற்றி நன்கு அறிந்த தம்பிகளோ, ‘அண்ணன் பேசுனதை உண்மைன்னு நினைச்சிட்டீங்களா… சும்மா அப்படித்தான் பேசுவார். ஆனா, கலைக்க மாட்டார். எங்களுக்கு இத்தனை பேர் ஓட்டு போட்டிருக்காங்க. இது நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் மக்கள் எங்களை மதிக்கலை. சட்டமன்றத் தேர்தல்ல பாருங்க. 2026ல் தனியா நின்னு ஆட்சியை பிடிக்கப் போறாரு, அப்புறம் பாருங்க’’ என்கிறார்கள்.

அதுசரி, சீமான் பேச்சு காமெடியாப் போச்சு.

Leave a Comment