தமிழக அரசுக்கு எதிராக விதவிதமாக குற்றச்சாட்டுகளை சொல்லி வருவதில் நாம் தமிழர் கட்சியினரும் சவுக்கு சங்கரும் ஒற்றுமையாக இருந்தாலும், சமீப காலத்தில் இவர்களுக்குள் மோதல் உருவாகிவிட்டது.
ஆகவே, சவுக்கு சங்கருக்கு எதிராக நாம் தமிழரின் சாட்டை துரைமுருகன் தொடர்ந்து எதிர்வினை ஆற்றிவருகிறார். இந்த நிலையில் சவுக்கு சங்கரின் கைதுக்கு நாம் தமிழர் கட்சியினர் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவே இல்லை. கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டதையும் ஆதரிக்கவே செய்திருந்தார்கள்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் சவுக்கு சங்கர் கைது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான், ‘காவல் துறை அதிகாரி அருண் அவர்களுடன் பெண் காவலர்களை இணைத்து சவுக்கு சங்கர் பேசியதைக் கேட்பதற்கே சங்கடமாக இருந்தது. இதை அவர் தவிர்த்திருக்க வேண்டும்’ என்றார்.
கஞ்சா வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு சீமான், ‘இந்த அரசு தானே கஞ்சா விற்பனை செய்கிறது. சாராயக் காசு போதவில்லை என்பதால் கஞ்சா விற்பனை செய்கிறார்கள். அவர்களே குற்றம் சாட்டுகிறார்கள்’ என்று பேசியிருக்கிறார்.
சவுக்கு சங்கரை என்னுடைய சார்பில் தேர்தலில் நிறுத்துவேன், பிரசாரம் செய்வேன் என்றெல்லாம் சொன்னது என்னாச்சு சீமான்..?