மீண்டும் கொதிநிலையில் சாம்சங் ஊழியர்கள்.?

Image

பேச்சுவார்த்தையில் குளறுபடி

எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டது என்று சொல்லப்பட்டாலும், சாம்சங் போராட்டத்தில் இன்னமும் எந்தவொரு உருப்படியான மாற்றமும் நிகழவே இல்லை. மீண்டும் போராட்டம் நடத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால் எந்த நேரமும் தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்வாகள் என்று சொல்லப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தை இழுபறி பற்றி சி.ஐ.டியூ. முத்துக்குமார், ‘’சாம்சங் தொழிற்சாலையில் சங்கம் அமைத்த பிறகு தொழிலாளர்கள் மத்தியில் நிர்வாகம் தொடர்ச்சியாக ஒரு பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறது. தொழிற்சங்கத்தோடு பேச மாட்டோம் வெளித் தலைமையோடு பேச மாட்டோம் என்ற குழப்பம் நீடிக்கிறது.

இதுவரையில் நடந்திருக்கிற ஒன்பது பேச்சு வார்த்தைகளில் சாம்சங் நிர்வாகத்தின் சார்பில் குறைந்தபட்சம் 4 உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்குப் பிறகு நடைபெற்ற முதல் பேச்சு வார்த்தையில் கடந்த காலத்தை விட தென்கொரியாவின் சட்ட வல்லுநர்களும் பேச்சுவார்த்தை நடைபெற்ற அலுவலகத்தில் வெளியேஅமர்ந்து பேச்சுவார்த்தை குழுவுக்கு வழிகாட்டினார்கள்.

ஆனாலும் அவர்கள் சொல்லுகிறார்கள் தொழிற்சங்க வெளித் தலைமையோடு நாங்கள் பேசவே மாட்டோம் என்று ஒன்பது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இருக்கிற அரசு ஆவண பதிவுகளில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் நிர்வாகம் என்று ஒரு பக்கமும் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் சிஐடியூ என்று மறுபக்கமும் இரண்டு பெரும் அமைப்புகளின் அதிகாரப்பூர்வ நிர்வாகிகளும் பங்கெடுத்து நடத்திய பேச்சுவார்த்தையின் பதிவுகள் பக்கம் பக்கமாக கொட்டி கிடக்கிறது.

ஒரு சங்கத்துக்கும் நிர்வாகத்திற்குமான உறவு இப்படித்தான் தொடங்கும் இதன் வரலாற்று முடிவு ஒப்பந்தத்தில் போய் தான் முடியும் அப்படித்தான் நடந்திருக்கிறது இதுவரையிலும் நடந்த பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சங்க உரிமைக்கான போராட்ட வரலாறு’’ என்று கூறியிருக்கிறார். இப்போதே அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

Leave a Comment