சென்னை முழுக்க ஒரே மாதிரி கடைகள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 296

சென்னை மாநகரம் முழுக்க குப்பையை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்றால் மைக்ரோ லெவல் கண்காணிப்பு முக்கியம் என்பதாலே தெருவுக்குத் தெரு கடை அமைப்பது என்று திட்டமிட்டார் மேயர் சைதை துரைசாமி.

இந்தத் திட்டப்படி ஒரே அளவு,  ஒரே தோற்றம், ஒரே நிறம் கொண்ட கடைகள் சென்னை மாநகரம் முழுவதும் தெருவுக்குத் தெரு அமைக்கப்பதற்கு மேயர் சைதை துரைசாமி திட்டமிட்டார். இப்படி சென்னை நகரம் முழுவதும் ஒரே மாதிரியான கடைகள் அமைக்கப்படும்போது, நகரின் அழகும் அமைப்பும் அதிகரித்துவிடும்.

சுகாதாரமான வழியில் குப்பை சேகரிப்பதற்கு உதவவேண்டியது மட்டுமே கடைக்காரரின் பணியாக இருக்கும் என்று திட்டமிட்டார். கடை மூலம் வியாபாரம் செய்து வருமானம் பெற்றுக்கொள்ள முடியும். அவர் கடையில் இருப்பதால்  தெருவை கண்காணிப்பதும், சுத்தம் செய்வதும் மிகவும் எளிய பணியாகவே இருக்கும் என்று கணக்கிட்டார். சேகரிக்கப்பட்ட குப்பைகளை எப்போதும்போல் மாநகராட்சி லாரி வந்து அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றுவிடும். எனவே, கடைக்காருக்கு மிக அதிகமான வேலையும், பொறுப்புகளும் கிடையாது.  

இந்த வகையில் சென்னை நகர் முழுவதும் சுமார் 3 லட்சம் கடைகள் அமைக்க முடியும் என்று மேயர் சைதை துரைசாமி  கணக்குப் போட்டார். இந்தக் கடைகள் மூலம் 3 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்பதால், தெருவை சுத்தமாக பார்த்துக்கொள்வார்கள். பொருளாதார ரீதியில் பின் தங்கிய, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இந்த கடைகளைக் கொடுப்பதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கையும் மேம்படும் என்று திட்டமிட்டார். அம்மா உணவகம் போன்று பெண்களுக்கு இதில் அதிக வாய்ப்புகள் கொடுப்பதற்கும் மேயர் சைதை துரைசாமி திட்டம் போட்டிருந்தார்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment