இன்றைய இளம் தலைமுறையினர், சைதை துரைசாமியை மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி அறக்கட்டளை நடத்தும் கல்வி சேவையாளராக மட்டுமே பார்க்கிறார்கள்.
அண்ணா தி.மு.க. எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கியதற்கு விதை போட்டவர்களில் சைதை துரைசாமியும் ஒருவர். அண்ணா தி.மு.க.வின் பகத்சிங் என்றும் அண்ணா தி.மு.க.வின் முதல் தியாகி என்றெல்லாம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் பாராட்டப்பட்டவர்.
எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையாக இருந்ததாலோ என்னவோ, புரட்சித்தலைவி ஜெயலலிதா காலத்தில் அரசியலில் இருந்து அவமானப்படுத்தப்பட்டு, ஓரங்கட்டப்பட்டார்.
அந்த காலகட்டத்தில் கட்சி மாறச்சொல்லி எத்தனையோ பேர் கட்டாயப்படுத்தினார்கள். பதவி தருவதாக ஆசை காட்டினார்கள். அவர்களிடம், ‘புரட்சித்தலைவர் என் தெய்வம், அ.தி.மு.க. எனது கட்சி, இரட்டை இலை என் சின்னம். இந்த கட்சியில் எனக்கு பதவி முக்கியமில்லை, நான் உறுப்பினராக இருப்பதே எனக்கு போதும்’ என்று உறுதியாக மறுத்தவர்.
அரசியல் அங்கீகாரம் இல்லையென்றாலும் அதைப் பற்றி கொஞ்சமும் அவர் கவலைப்பட்டதில்லை, யாரிடமும் குறை கூறியதில்லை.
முழு நேரமும் பொதுமக்கள் மற்றும் மாணவர் சேவையில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட சைதை துரைசாமிக்கு மீண்டும் ஜெயலலிதாவிடம் இருந்து அழைப்பு எப்படி வந்தது..? எப்படி பெருநகர சென்னையின் மேயராக மாறினார்..? மேயர் பணியில் என்னவெல்லாம் செய்தார்..?
விறுவிறுப்பான அரசியல் தொடர் விரைவில் ஆரம்பம்