சைதை துரைசாமிக்கு மக்களிடம் தனிப்பட்ட செல்வாக்கு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 105

தி.மு.க.வின் கோடையாக கருதப்பட்ட சென்னை மேயர் தேர்தலில் சைதை துரைசாமி பெற்ற சாதனை வெற்றி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், 2011 மேயர் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் துணை இல்லாமல் அண்ணா தி.மு.க. தனித்து நின்றது குறிப்பிடத்தக்கது.

புரட்சித்தலைவரின் இரட்டை இலைக்கும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவுக்கும் இருந்த செல்வாக்கு போலவே சைதை துரைசாமிக்கும் தனிப்பட்ட செல்வாக்கு மக்களிடம் இருந்த காரணத்தாலே யாரும் பெறமுடியாத சாதனை வெற்றி கிடைத்தது. சைதை துரைசாமிக்கு ஒரே நாளில் இந்த செல்வாக்கு கிடைத்துவிடவில்லை. புரட்சித்தலைவரின் ரசிகராக சென்னைக்கு வந்தது முதல் மக்களுக்குத் தன்னால் இயன்ற மக்கள் சேவையை நாள் தோறும் செய்து நற்பெயரை சம்பாதித்து இருக்கிறார். 

எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அதிமுகவின் தீவிர தொண்டர். தொகுதி அமைப்பாளராக எம்ஜிஆர் அவர்களால் நியமிக்கப்பட்டு, கட்சி தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு, எம்ஜிஆரது கடைசி காலம் வரை  பதவி வகித்து வந்தார். குடிசைமாற்று வாரிய உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர். கட்சியின் பெயரைச் சொல்லி பணம் சம்பாதிக்காதவர், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆட்படாதவர்.

பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகள் செய்பவர், இலவசமாக தட்டச்சு செய்து கொடுத்தவர், மாணவர்களுக்கு இலவச ஜெராக்ஸ் கொடுத்தவர், மலிவு விலை உணவகம் நடத்தியவர், மாணவர்களுக்கு இலவச நோட்டு கொடுத்தவர், மனிதநேயம் அறக்கட்டளை மூலம் ஐ.ஏ.எஸ்., மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மையம் நடத்தி வருபவர் என்றெல்லாம் சைதை துரைசாமி பற்றி மக்களிடம் நல்ல அபிப்ராயம் இருந்தது. இந்த நற்பெயர் எல்லாமே சேர்ந்து தான் அவருக்கு மேயர் தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற்றுக் கொடுத்தது.

அதனாலே தி.மு.கவின் கோட்டையாக கருதப்பட்ட சென்னைக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், மூன்று நாடாளுமன்றத் தொகுதியிலும் சைதை துரைசாமிக்கு அதிக வாக்குகள் கிடைத்தது என்பதை இந்த பட்டியல் மூலம் அறியலாம்.

மனிதநேய அறக்கட்டளை சார்பில் மலிவு விலை உணவகம் நடத்திய அனுபவத்தைக் கொண்டு, மாநகராட்சி சார்பில் அம்மா உணவகம் என்ற கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 2014ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், சென்னையின் மூன்று பாராளுமன்றத் தேர்தலிலும் மகத்தான வெற்றியைப் பெற்றதற்கு, உங்களது அம்மா உணவகம் ஒரு முக்கிய காரணம் என்று ஜெயலலிதா அவர்களால் பாராட்டப்பட்டவர்.

–      நாளை பார்க்கலாம்.

Leave a Comment