• Home
  • அரசியல்
  • விஜய் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சகாயம் ஐ.ஏ.எஸ்..?

விஜய் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சகாயம் ஐ.ஏ.எஸ்..?

Image

மாநாடு வரவேற்புக்கு பஞ்ச் டயலாக்

சினிமாவில் மட்டுமே பஞ்ச் டயலாக் பேசிவந்த நடிகர் விஜய் இப்போது அறிக்கைகளிலும் பஞ்ச் டயலாக் தெறிக்க விடுகிறார். மாநாடு தொடர்பாக விஜய் விட்டிருக்கும் பஞ்ச் டயலாக் செம மாஸ் ஆகியிருக்கிறது. அதோடு விஜய் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சகாயம் ஐ.ஏ.எஸ். அறிவிக்கப்படுவார் என்றும் மாநாட்டில் விஜய்யுடன் சேர்ந்து அவர் மேடை ஏற இருப்பதாக சொல்லப்படுவதும் எக்கச்சக்க பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கும் மாநாடுக்கு அழைப்பு விடுத்திருக்கும் விஜய், ‘’’அரசியல் களத்தில். வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி’ மாநாட்டுக்கு வருகின்ற மற்ற அனைவரும், மாநாட்டுக்கு வந்து செல்லும்போது, பாதுகாப்புடன் பயணிப்பது மிக மிக முக்கியம். அதேபோல, பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்

அதோடு, கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், முதியவர்கள் ஊடக மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக அவர்கள் வீடுகளில் இருந்து நம் வெற்றிக் கொள்கை திருவிழாவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்..’’ என்று ஒரு சிறப்பான வழிகாட்டுதலை வெளியிட்டிருக்கிறார்.

இந்த நிலையில், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சகாயம் ஐ.ஏ.எஸ். இப்போது விஜய்யுடன் முழுமையான ஆலோசனையில் இருக்கிறார் என்றும் அவரை முதல்வர் வேட்பாளராக மாநாட்டில் விஜய் அறிவிப்பார் என்ற பேச்சும் எழுந்துள்ளது. இப்படி நடக்கும் பட்சத்தில் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலை உருவாகும் என்பது நிச்சயம்.

முதல்வராக நடிகர் விஜய் அமரவேண்டும் என்று ஆசைப்படும் அவரது ரசிகர்கள் கூட இப்போது தலைவர் இணை முதல்வராக இருந்து ஆட்சியை நடத்த வேண்டும் என்று சொல்கிறார்களே தவிர, சகாயம் வேண்டாம் என்று யாரும் சொல்லவே இல்லை. ஆக, விரைவில் அரசியல் பூகம்பம் வரப்போகிறது.

Leave a Comment