என்ன செய்தார் சைதை துரைசாமி – 231
பெருநகர சென்னை மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பாராட்டு கிடைத்தது மட்டுமின்றி மக்களிடமிருந்தும் பேராதரவு கிடைத்தது. அதனால் சென்னை மாநகராட்சியில் முதன்முறையாக அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டங்களை சைதை துரைசாமி அமல் படுத்தினார்.
பெருநகர சென்னையில் எல்லா சாலைகளிலும் தெர்மோபிளாஸ்டிக் பெயின்ட்கள் பூசப்பட்டன. அதோடு அனைத்து சாலைகளிலும் இரவில் மிளிரும் ஸ்டெட்டுகள் பதிக்கப்பட்டன. இதனால் சென்னை நகர சாலைகள் இரவுப் பயணத்துக்கு மிகவும் பாதுகாப்பாக மாறியது மட்டுமின்றி அழகுடன் திகழ்ந்தன. போக்குவரத்து சந்திப்புகளில் விபத்தைத் தடுக்கும் வகையில் மத்திய தடுப்பான்கள் அமைப்பது கட்டாயமாக்கப்பட்டது. மேலும், வாகனங்கள் தடம் மாறாமல் செல்லும் வகையில் வழித்தடக் குறியீடுகள் அனைத்து இடங்களிலும் அமைக்கப்பட்டன.
வாகனவோட்டிகள் மட்டுமின்றி பாதசாரிகளின் வசதியும் பாதுகாப்பும் முக்கியம் என்பதால் அவர்களுக்கும் தேவையான நடவடிக்கைகளில் எடுப்பதற்குத் திட்டமிட்டார் மேயர் சைதை துரைசாமி. அதன்படி பாதசாரிகள் எளிதில் அடையாளம் கண்டு பயன்படுத்தும் வகையில் மிளிரும் ஜீப்ரா கிராஸ் எனப்படும் குறுக்கு நடைபாதைகள் புதிய வடிவமைப்பில் அமைக்கப்பட்டன.
சாலை ஓரங்களில் இருக்கும் மரங்களுக்கு மழை நீர் முறையாகக் கிடைக்காத வகையில் ரோடுகள் போடப்பட்டிருந்தன. அதனால் ரோட்டோர மரங்கள் பலவீனமாகவே இருந்தன. இதனை மாற்றியமைத்து மரங்களுக்கு மழை நேரத்தில் போதிய தண்ணீர் கிடைப்பதற்கும் அதேநேரம், சாலைக்கு தொந்தரவு இல்லாமலும் மேயர் சைதை துரைசாமி திட்டமிட்டார். அவரது வழிகாட்டுதல் படி மரங்களைச் சுற்றிலும் மழைநீர் செல்லும் வகையில் கான்கிரீட் ஜல்லிகள் போடப்பட்டன. அதேநேரம், மழைநீர் எளிதில் கடந்து செல்லும் வகையில் சாலையின் இரு ஓரங்களிலும் நீர்த்தடம் அமைக்கப்பட்டன.
மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் நேரத்தைக் குறைக்கும் வகையில் சைதை துரைசாமி மேற்கொண்ட நடவடிக்கைகள் நல்ல பயன் கொடுத்தன.
- நாளை பார்க்கலாம்.