பாதசாரிகளுக்கும் பாதுகாப்பான சாலை வசதிகள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 240

சாலை முழுக்கவே வாகனங்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற எண்ணமே வாகனவோட்டிகளிடம் நிலவுகிறது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், அவர்களுக்குரிய வழியில் செல்லாமல், லேன் மாறி மாறி ஓட்டுகிறார்கள். ஆட்டோக்காரர்கள் ரோடு முழுக்கவே அவர்களுக்குச் சொந்தம் என்ற நினைப்பில் கண்ட இடத்திலும் ஆட்டோவை சட்டென நிறுத்தி ஆட்களை ஏற்றவும், இறக்கவும் செய்கிறார்கள்.

கார் வைத்திருப்பவர்கள் அதிவேகமாக சாலையில் செல்ல விரும்புவதால் ஆட்டோ, டூவீலர், மீன்பாடி வண்டிகள் போன்றவைகளை தொந்தரவாகக் கருதுகிறார்கள். வேன், லாரி, பஸ் டிரைவர்களை சொல்லவே வேண்டியதில்லை. ஹார்ன் அடித்தே பயமுறுத்திவிடுவார்கள். இந்த வகையில் அத்தனை வாகனவோட்டிகளும் பாதசாரிகளை எதிரியாகவே பார்ப்பார்கள். 

சாலையைக் கடக்கும் பாதசாரிகளை வேண்டுமென்றே பயமுறுத்துவது போன்று நெருக்கமாக ஓட்டி மிரட்டுவார்கள். பாதசாரிகளிடம், ‘வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா சாவுகிராக்கி’ என்று சர்வ சாதாரணமாகத் திட்டுவதை ரோடுகளில் பார்க்கலாம். உண்மை என்னவென்றால் ரோடு அனைவருக்கும் சொந்தம். பாதசாரிகளுக்கும் ரோட்டில் முழு உரிமை உண்டு.

நடை பாதைகளை பலரும் ஆக்கிரமித்து வைத்திருப்பதாலே அவர்கள் ரோட்டுக்கு வரவேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். இந்த நிலையை மாற்றி, பாதசாரிகளுக்கு சாலையில் உரிமை கொடுப்பதற்கு மேயர் சைதை துரைசாமி ஆசைப்பட்டார். வளர்ந்த நாடுகளில் எல்லாம் சாலையில் நடந்து செல்பவர்களுக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பான நடைபாதைகள் அமைக்கப்படுகின்றன. பாதசாரிகள் மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனத்தில் செல்வதற்கும் பாதுகாப்பான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

வெளிநாடுகளைப் போன்று சென்னையிலும் பாதசாரிகளுக்கு ஏற்ற சாலைகள் அமைப்பதற்கு ஆசைப்பட்டார் மேயர் சைதை துரைசாமி. இதற்காக தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தினார். அந்த நேரத்தில் ஒரு நல்ல செய்தி மேயர் சைதை துரைசாமிக்குக் கிடைத்தது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment