• Home
  • அரசியல்
  • அரசு பதவிகளில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள்?

அரசு பதவிகளில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள்?

Image

ராகுல்காந்தி சீரியஸ் குற்றச்சாட்டு

சமீபத்தில் வெளியான யுபிஎஸ்சி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பில் அரசியல் சாசனத்தை மீறி எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று குரல் எழுப்பப்படும் நிலையில், இதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாக அம்பலப்படுத்தியிருக்கிறார் ராகுல் காந்தி.

இதுகுறித்து ராகுல்காந்தி, ‘’யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்குப் (UPSC) பதிலாக ‘ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்’ (RSS) மூலம் அரசு ஊழியர்களை நியமிப்பதன் மூலம், நரேந்திர மோடி அரசியலமைப்பை தாக்குகிறார். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள முக்கியமான பதவிகளில் லேட்டரல் என்ட்ரி மூலம் ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் SC, ST மற்றும் OBC பிரிவினரின் இடஒதுக்கீடு வெளிப்படையாகப் பறிக்கப்படுகிறது.

நாட்டின் உயர்மட்ட அதிகாரத்துவம் உட்பட அனைத்து உயர் பதவிகளிலும் தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதித்துவம் பெறவில்லை என்று நான் எப்போதும் கூறி வந்தேன். இதை சரி செய்வதற்கு பதிலாக, குறுக்குவழி மூலம் அவர்கள் உயர் பதவிகளில் இருந்து மேலும் வெளியே தள்ளப்படுகிறார்கள். இது UPSCக்குத் தயாராகும் திறமையான இளைஞர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகவும், தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதியின் மீதான தாக்குதலாகவும் உள்ளது.

ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரதிநிதிகள், முக்கிய அரசாங்கப் பதவிகளை ஆக்கிரமிப்பதன் மூலம் என்ன செய்வார்கள் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் SEBI. அங்கு முதல்முறையாக தனியார் துறையைச் சேர்ந்த ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாக அமைப்பு மற்றும் சமூக நீதி இரண்டையும் புண்படுத்தும் இந்த தேச விரோத நடவடிக்கையை இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்க்கும். இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர, ‘ஐ ஏ எஸ்’ பணியை தனியார்மயமாக்குவதுதான் ‘மோடியின் உத்தரவாதம்’.’’ என்று கூறியிருக்கிறார்.

இந்த அறிவிப்பை வாபஸ் வாங்குமா யுபிஎஸ்சி.?

Leave a Comment