விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிடப்பட்ட சாலைகள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 199

சாலை விரிவாக்கம் என்ற திட்டத்தைக் கைவிடும்படி பல முக்கியப் பிரமுகர்கள் மேயர் சைதை துரைசாமியிடம் நேரடியாகவே பேசினார்கள், சிலர் மறைமுகமாக மிரட்டினார்கள். அத்தனை எளிதில் சாலை விரிவாக்கம் செய்ய முடியாது என்பதால் இந்த விஷயத்தில் காலை வைக்க வேண்டாம் என்று பலர் நிஜமான அக்கறையுடன் பேசினார்கள்.

ஆனால், போக்குவரத்து நெரிசலைத் தீர்ப்பதற்கு இதுவொன்றே சரியான வழி என்பதை மேயர் சைதை துரைசாமி நம்பினார். ஆகவே, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2-வது முழுமைத்திட்டத்தில்,  முதல் கட்டமாக 14 முக்கிய சாலைகளை விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிடப்பட்டது.

1            சர்தார் பட்டேல் சாலை         

2            நெல்சன் மாணிக்கம் சாலை            

3            சாந்தோம் நெடுஞ்சாலை    

4            ஸ்ட்ராகான்ஸ் சாலை          

5            பெரம்பூர் பேரக்ஸ் சாலை   

6            டாக்டர் முத்துலட்சுமி சாலை          

7            கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை       

8            காளியம்மன் கோயில் தெரு            

9            பேப்பர் மில்ஸ் சாலை          

10          செம்பியம் ரெட்டில்ஸ் சாலை         

11          ஆற்காடு சாலை (என்.எஸ்.கே. சாலை)     

12          கோடம்பாக்கம் சாலை         

13          ஜெயராமன் தெரு     

14          மசூதி தெரு    

இதன் தொடர்ச்சியாக அடுத்த 10 முக்கிய சாலைகளும்  விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

1.              சூளைமேடு நெடுஞ்சாலை

2.             ராயப்பேட்டை நெடுஞ்சாலை

3.             டாக்டர் நடேசன் சாலை

4.             ஆர்.கே. மடம் சாலை

5.             வேளச்சேரி பிரதான சாலை

6.             புரசைவாக்கம் நெடுஞ்சாலை

7.             அல்லி குளம் இணைப்புச் சாலை

8.             கோடம்பாக்கம் நெடுஞ்சாலை

9.             வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை

  1.    அவ்வை நகர் மெயின் ரோடு

இந்த அறிவிப்பு சம்பந்தப்பட்ட சாலைகளில் சென்று வரும் வாகனவோட்டிகளுக்கு பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது. அதேநேரம், இதனை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவர அதிக முயற்சியும் உழைப்பும் தேவைப்படும் என்பது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment