என்ன செய்தார் சைதை துரைசாமி – 394
சாலை விரிவாக்கமே சென்னையின் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு சரியான தீர்வு என்பதில் மேயர் சைதை துரைசாமி உறுதியாக இருந்தார். அதற்கு எந்தெந்த சாலைகளை எல்லம் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதையும் ஆய்வு செய்து அறிவிப்பும் வெளியிட்டார். மேயர் சைதை துரைசாமி தொலைநோக்குப் பார்வையுடன் திட்டமிட்டிருந்த சாலை விரிவாக்கம் அப்போதே நடைபெற்று இருந்தால்
சமீபத்தில் சென்னை, மத்திய கைலாஷ் சந்திப்பில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்ட நேரத்தில், ’அந்த சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்கு ஆய்வு செய்யுங்கள்’ என்று கேட்டிருந்த செய்தியை பலரும் படித்திருப்பீர்கள். எதிர்காலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதை கணக்கிட்டே மேயர் சைதை துரைசாமி சாலை விரிவாக்கம் செய்வதற்கு உண்மையான ஆர்வமும் அக்கறையும் காட்டினார்.
மேயர் சைதை துரைசாமியின் திட்டமிடுதல் மூலம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2-வது முழுமைத்திட்டத்தில், முதல் கட்டமாக 14 முக்கிய சாலைகளை விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிடப்பட்டது.
1 சர்தார் பட்டேல் சாலை
2 நெல்சன் மாணிக்கம் சாலை
3 சாந்தோம் நெடுஞ்சாலை
4 ஸ்ட்ராகான்ஸ் சாலை
5 பெரம்பூர் பேரக்ஸ் சாலை
6 டாக்டர் முத்துலட்சுமி சாலை
7 கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை
8 காளியம்மன் கோயில் தெரு
9 பேப்பர் மில்ஸ் சாலை
10 செம்பியம் ரெட்டில்ஸ் சாலை
11 ஆற்காடு சாலை (என்.எஸ்.கே. சாலை)
12 கோடம்பாக்கம் சாலை
13 ஜெயராமன் தெரு
14 மசூதி தெரு
இதன் தொடர்ச்சியாக அடுத்த 10 முக்கிய சாலைகளும் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
1. சூளைமேடு நெடுஞ்சாலை
2. ராயப்பேட்டை நெடுஞ்சாலை
3. டாக்டர் நடேசன் சாலை
4. ஆர்.கே. மடம் சாலை
5. வேளச்சேரி பிரதான சாலை
6. புரசைவாக்கம் நெடுஞ்சாலை
7. அல்லி குளம் இணைப்புச் சாலை
8. கோடம்பாக்கம் நெடுஞ்சாலை
9. வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை
10. அவ்வை நகர் மெயின் ரோடு
இந்த அறிவிப்பை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவர அதிக முயற்சியும் உழைப்பும் தேவைப்படும் என்பது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியும். ஆனாலும், கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.
நாளை பார்க்கலாம்.