மழைக் காலத்திலும் சாலை சீரமைப்பு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 229

பொதுவாக மழை காலங்களில் சாலைகளில் சீரமைப்புப் பணி மேற்கொள்வதில்லை. ஏனென்றால் மழைத் தண்ணீர் ஓடுவதன் காரணமாக சாலைகளில் செய்யப்படும் சீரமைப்புப் பணி நிலைத்து நிற்காமல் சீக்கிரம் பெயர்ந்துவிடும். அதனால், மழை காலம் முடியட்டும் என்று காத்திருந்து, அதன் பிறகே சாலை சீரமைப்பு செய்வது சென்னை மாநகராட்சியின் வாடிக்கையான நடவடிக்கையாக இருந்துவந்தது.  

அதேநேரம், மழைக் காலங்களில் தான் ரோடுகள் மிகவும் மோசமாக பாதிப்புகளை சந்தித்தன. பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளித்தன. இந்த சாலைகளில் நடப்பது மட்டுமின்றி இருசக்கர வாகங்கள், ஆட்டோ, கார் என அனைத்து வாகனங்களும் கடும் சிரமத்தைச் சந்தித்தன. நிறைய விபத்துகள் ஏற்பட்டன.  இதனைக் கண்ட மேயர் சைதை துரைசாமி, மழைக் காலங்களிலும் சீரமைப்புப் பணி மேற்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார். மழையைத் தாக்குப் பிடிக்கும் வகையில் எப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைக் கையாளலாம் என்று ஆலோசனை மேற்கொண்டார்.

பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களிடம் மேற்கொண்ட ஆலோசனையின் அடிப்படையில் மேயர் சைதை துரைசாமி காலத்தில் ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி,  ‘கோல்டு மிக்ஸ்’ என்ற  புதிய  தார்க் கலவை சாலை பயன்படுத்தப்பட்டது. இதனால் மழை பெய்துகொண்டு இருந்தபோதே சாலைகளைச்   செப்பனிடும் பணி செய்ய முடிந்தது. இந்த கோல்டுமிக்ஸ் தார்க்கலவை மூலம் ரோடுகளில் இருந்த பள்ளம், குழி போன்றவை சரிசெய்யப்பட்டன. இந்த சாலைகள் மழையினால் பாதிக்கப்படாமலும் இருந்தன.

மழைக் காலங்களில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயணிக்கும் மக்களுக்கு இப்படி உடனுக்குடன் சாலையில் சீரமைப்புப் பணி செய்வது மிகப்பெரும் நிம்மதியாக இருந்தது. மழையினால் எந்தெந்த சாலைகள் பாதிக்கப்படுகின்றன என்று கண்டறியப்பட்டு, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டன. அதோடு, மாநகராட்சிக்கு வரும் புகார்களின் அடிப்படையிலும் சாலைகளில் சீரமைப்புப் பணிகள் செய்யப்பட்டன.

மழைக் காலங்களில் சாலை சீரமைப்பு என்பது மேயர் சைதை துரைசாமியின் தனிப்பட்ட சாதனை என்பதை மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment