கடற்கரை கடைகளை முறைப்படுத்தும் நடவடிக்கை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 213

கலங்கரை விளக்கம் தொடங்கி பட்டினப்பாக்கம் வரையிலான இணைப்பு சாலையை செயலுக்குக் கொண்டுவந்த மேயர் சைதை துரைசாமியின் நடவடிக்கைக்கு பொதுமக்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்கள். ஏனென்றால், காலம்காலமாக அந்தப் பகுதியில் குடியிருந்த மீனவ மக்களுடன் வேறு ஒருவரால் இத்தனை பொறுமையாக மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி காரியம் சாதித்திருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.

லூப் சாலையும் காமராஜர் சாலையும் சென்னை நகரை தூய்மைப்படுத்துவதற்கு மேயர் சைதை துரைசாமி தன்னை அர்ப்பணித்துக்கொண்டதற்கு அடையாளமாகவே சொல்லலாம். கேட்பாரற்றுக் கிடந்த சீர்கேடுகளை எல்லாம் களைவதற்கு அக்கறை எடுத்துக்கொண்டு தினமும் 19 மணி நேரம் உழைத்த காரணத்தாலே, இவற்றை சைதை துரைசாமியால் சாதிக்க முடிந்தது. இன்று அந்த சாலைகள் மிகவும் அழகாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறதென்றால், அதற்கு முழு காரணமும் மேயர் சைதை துரைசாமி மட்டும் தான்.

அடுத்தபடியாக மெரினா கடற்கரையை உலகத்தரத்துக்கு கொண்டுவர முயற்சிகள் எடுத்தார். மணல் பரப்பில் மூங்கில்கள் மூலம் மறைப்புகள் ஏற்படுத்தி படகு, மீன் வலைகளை மறைக்கத் திட்டமிட்டார். அதன்படி காமராஜர் சாலையில் இருந்து கடற்கரையைப் பார்க்கும்போது, ஓவியம் வரையப்பட்ட மூங்கில் தடுப்புகளும் கடற்கரையும் மட்டுமே தென்படும்.

அதோடு நவீன முறையில் மணல் தூய்மைப்படுத்தவும் ஆங்காங்கு குப்பைத் தொட்டிகள் வைத்து அவ்வப்போது அகற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மக்களுக்கு டாய்லட் வசதி, குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. வெளிநாட்டு கடற்கரை போன்று பல்வேறு விளையாட்டுகள் அரங்கேறும் இடமாகவும், குழந்தைகள் மற்றும் வெளிநாட்டினர் மகிழ்ச்சியாகப் பொழுதுபோக்கும் வகையில் மியூசிக்கல் டான்ஸ் போன்ற பல்வேறு கேளிக்கைகள் இடம்பெறவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

அடுத்தபடியாக கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த கடைகளை முறைப்படுத்தும் நடவடிக்கையில் மேயர் சைதை துரைசாமி இறங்கினார். ஒருசிலர் கடற்கரையில் நிரந்தரக் கடைகள் அமைத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஒரு நபரே நாலைந்து கடைகள் நடத்துவதும், சிலர் உள் வாடகைக்கு கடைகள் விடுவதும், மாநகராட்சிக்கு எந்தக் கட்டணமும் செலுத்தாமல் சிலர் ஏமாற்றி வருவதும் மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. இதுபோன்ற எந்த முறைகேடுகளையும் அனுமதிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

கடற்கரை அழகாகவும் ஆரோக்கியமாகவும் குப்பையின்றித் திகழ வேண்டுமென்றால் கடற்கரை மணலில் நிரந்தரக்கடைகள், நிரந்தரக் கட்டமைப்புகள் இருக்கக்கூடாது என்று சைதை துரைசாமி விரும்பினார். அதனால் கடற்கரையில் கடைகளை எப்படி மாற்றி அமைக்கலாம் என்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, காலம் காலமாக இங்கு வியாபாரம் செய்துவருகிறோம், கடைகளில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று வியாபாரிகள் போர்க்கொடி தூக்கினார்கள்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment