குப்பை வளாகத்தில் சீர்திருத்தம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 303

பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் வளாகத்தை மறுசீரமைப்பு செய்வது மட்டுமே பெருநகர சென்னை குப்பை மேலாண்மைக்குத் தீர்வு என்பது தெரியவந்ததும் நேரில் ஆய்வு மேற்கொண்டார் மேயர் சைதை துரைசாமி. நேரில் சென்று ஆய்வு செய்த காரணத்தால் அங்கு இருந்த அத்தனை பிரச்னைகளுக்கும் மேயர் சைதை துரைசாமிக்குத் தெளிவாகத் தெரியவந்தன.

முதல் பிரச்னையாக குப்பை வளாகத்திற்குள் நுழைய முடியாத அளவுக்கு, வளாகத்தின் முன் பகுதியில் மட்டுமே நிறைய குப்பைகள் கொட்டப்பட்டுக் கிடந்தன. உள்ளே நிறைய இடம் இருந்தன என்றாலும் அவசரம் அவசரமாக முன் பக்கத்திலேயே குப்பையைக் கொட்டிச் செல்வது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது.

அனைத்து குப்பை லாரிகளும் உள்ளே போய் குப்பையைக் கொட்ட வேண்டும் என்று நேரடியாக உத்தரவு பிறப்பிக்காமல் அதற்கான காரணங்களைக் கேட்டறிந்தார். அப்போது தான், அவர்கள் அப்படி செய்வதற்குக் காரணம் தெரியவந்தது. அதாவது, உள்ளே வரையிலும் சென்று நுழைந்து திரும்பும் வகையில் நல்ல ரோடு வசதி இல்லை. அதோடு மழை பெய்யும் சமயங்களில் தண்ணீர் தேங்கிவிடுவதால் உள்ளே குண்டும் குழியுமாக மாறிவிடும். எனவே, முன் பகுதியில் கொட்டிவிட்டுச் செல்வதும் தெரிய வந்தது.

ஆகவே, முதலில் உள்ளே வரை சென்று திரும்பும் வகையில் ரோடு போடுவது முக்கியம் என்பதை உணர்ந்து, உடனடியாக அந்த பணியை மேற்கொண்டார். மேடு, பள்ளம் இல்லாமல் உள்ளே லாரிகள் சென்று சுலபமாகத் திரும்பும் வகையில் ரோடு போடப்பட்டது. அதன் பிறகே, லாரிகள் குப்பையை உள்ளே சென்று கொட்ட வேண்டும் என்று உத்தரவு போட்டார். சிக்கல்களை சீர் செய்யாமல் உத்தரவு போடுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பது மேயர் சைதை துரைசாமிக்கு நன்கு தெரியும் என்பதால், தெளிவாகத் திட்டம் போட்டு செயல்படுத்தினார்.

ரோடுகள் போடப்பட்டதும் குப்பைகள் வாசல் பகுதியில் கொட்டுவது நிறுத்தப்பட்டது. இதையடுத்து இந்த பகுதியைக் கடக்கும் போது எழும் துர்நாற்றமும் குறைந்துபோனது. நாளை பார்க்கலாம்

Leave a Comment