பாலங்கள் துறையில் சீர்திருத்தம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி –  268

பாலப் பணிகள் மேற்கொண்டதில் மேயர் சைதை துரைசாமி ஒரு சாதனையே படைத்தார் என்று சொல்லலாம். சென்னை மாநகராட்சியில் மேயர் சைதை துரைசாமி ஆற்றிய உரையின் சுருக்கம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே மேயர் சைதை துரைசாமி எத்தனை தீவிரமாகவும் தெளிவாகவும் பாலப்பணிகள் மேற்கொண்டார் என்பதை அறிந்துகொள்ள முடியும்,

இதுவே அந்த உரையின் சுருக்கம். ‘’மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில்  சென்னை மாநகரின் அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கு இதுவரை இல்லாத அளவில் ரூ.294.28 கோடி ரூபாய் ஒதுக்கி தந்து 71 பாலப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் 37 பாலப்பணிகள் ரூ.114.95 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளன. இது ரூ.23.76 கோடி மதிப்பீட்டில் ரங்கராஜபுரம் ரயில்வே சந்திக்கடவின் குறுக்கே வாகன மேம்பாலம், ரூ.23.00 கோடி மதிப்பீட்டில் தங்கசாலை சந்திப்பில் வள்ளலார் நகர் மேம்பாலம், ரூ.16.66 கோடி மதிப்பீட்டில் கத்திவாக்கம் நெடுஞ்சாலை – காக்ரேன் பேசின் சாலையில் புதிய மேம்பாலப்பணி, ரூ.15.76 கோடி மதிப்பீட்டில் மணியக்கார சத்திர தெரு இரயில்வே சந்திக்கடவின் குறுக்கே சுரங்கப்பாதை.  ரூ.13.39 கோடி மதிப்பீட்டில் வில்லிவாக்கம் எல்.சி.2 இரயில்வே சந்திக்கடவின் குறுக்கே வாகன சுரங்கப்பாதை.  ரூ.10.72 கோடி மதிப்பீட்டில் 5 இடங்களில் புதிய பெட்டக வடிவ பாலங்களும், 9 இடங்களில் ஏற்கனவே உள்ள பாலங்களை மேம்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 

மேலும்  ரூ.3.37 கோடி மதிப்பீட்டில் மேத்தா நகர் ஆபீசர்ஸ் காலனி முதல் தெருவை வெங்கடாசலபதி தெருவுடன் இணைத்து பாலம்.   ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே  இந்திரா நகர் 2வது நிழற்சாலையையும்  ராஜீவ்காந்தி சாலையையும்  இணைக்கும்  பாலம்.  ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் ஓட்டேரி நல்லாவின் குறுக்கே நரசிம்மா நகர் மற்றும் எம்.எஸ். நகரையும் இணைக்கும் பாலம் கட்டுமானப்பணி, ரூ.1.74 கோடி மதிப்பீட்டில் ரங்கராஜபுரம் ரயில்வே சந்திக்கடவில் பாதசாரிகள்  மற்றும் இருசக்கர வாகனச்சுரங்கப்பாதை, ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் ஜெ.ஜெ.நகர், பாடிக்குப்பம் சாலையில் பாடிக்குப்பம் கால்வாய் குறுக்கே தற்போதுள்ள கீழ் மட்டப் பாலத்திற்கு மாற்றாக பெட்டக வடிவ பாலம், ரூ.1.43 கோடி மதிப்பீட்டில் விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே  பாரி தெருவில் வாகனப்பாலம்,  ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் 9 மேம்பாலங்களில் ஸ்டிரிப் சீல் எக்ஸ்பேன்சன் ஜாயின்ட்ஸ் மாற்றியமைத்து பழுதுபார்க்கப்பட்டது, ரூ. 77.00 லட்சம் மதிப்பீட்டில் சர்தார் பட்டேல் சாலை மற்றும் டாக்டர் முத்துலட்சுமி சாலை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தில் எபாக்ஸி வர்ணம் பூசும் பணி, ரூ.20 இலட்சம்  மதிப்பீட்டில் விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே சின்மயாநகர் காளியம்மன் கோயில் தெருவில் ஏற்கனவே உள்ள பாலத்திற்கு அருகில் புதிய பெட்டக வடிவ பாலம், ரூ.15.00 லட்சம் மதிப்பீட்டில் மாட்டாங்குப்பம், பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே திருவல்லிக்கேணி (எம்.ஆர்.டி.எஸ்.) ரயில் நிலையம் மற்றும் கெனால் சாலையை இணைக்கும் நடைமேம்பாலம் அமைக்கும் பணி.

தற்போது 21 பாலப் பணிகள் ரூ. 21.19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. ரூ.10.03 கோடி மதிப்பீட்டில் கோடம்பாக்கம் மேம்பாலத்தினை பழுது பார்த்து மேம்படுத்தும் பணியில் முக்கிய பணிகள் முடிவுற்று, நடைபாதை, படிக்கட்டுகள் மற்றும் வர்ணம் பூசும் பணி நடைபெறுகிறது. ரூ. 3.41 கோடி மதிப்பீட்டில் கொரட்டூர் ஏரி உபரிநீர் கால்வாயின் குறுக்கே கால்வாய் சாலையில் மதனாங்குப்பம் பிரதான சாலை அருகேயுள்ள தரை பாலத்தினை இடித்து விட்டு புதிய பெட்டக வடிவ பாலம் அமைக்கும் பணி. ரூ.1.94 கோடி மதிப்பீட்டில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே உள்ள 8 பாலங்களை அபிவிருத்தி செய்து மேம்படுத்தும் பணி. ரூ. 1.23 கோடி மதிப்பீட்டில் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் துரு பிடிக்காத எஃகு கைப்பிடிகள் அமைக்கும் பணி.  ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள 2 பாலங்களை அபிவிருத்தி செய்து மேம்படுத்தும் பணி. ரூ. 1.15 கோடி மதிப்பீட்டில் ராம் நகர் 3வது விரிவு பெட்டக வடிவ பாலம். ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் டாக்டர். சுப்பாராவ் நகர், வடஅகரம், ரயில்வே காலனி 2வது தெரு ஆகிய 3 இடங்களில் பெட்டக வடிவ பாலம் அமைக்கும் பணி, ரூ. 84.31 இலட்சம் மதிப்பீட்டில் உஸ்மான் சாலை மற்றும் மகாலிங்கபுரம் சந்திப்பில் உள்ள மேம்பாலம் மற்றும் டர்ன்புல்ஸ் சாலை  மற்றும் செனடாப் சாலை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தில் எபாக்ஸி வர்ணம் பூசும் பணி, ரூ. 31.20 லட்சம் மதிப்பீட்டில் ஆலந்தூர் சாலையிலுள்ள பாலத்தை அபிவிருத்தி செய்து மேம்படுத்தும் பணி, ரூ. 17.28 லட்சம் மதிப்பீட்டில் துரைசாமி சுரங்கப்பாதையின் கிழக்கு பக்கம் அணுகு சாலை பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment