சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது

Image

சர்தார்ஜி ஜோக்ஸ்

* ஒரு நாள் எப்படியோ தன்னை கடித்த கொசுவை உயிரோடு பிடித்து விட்டார் சர்தார். கொசு தன் கதை முடிந்ததாக நினைக்க, சர்தாரோ அதற்கு விருந்து வைத்து சிறப்பித்தார். பின்னர் அதற்கு ஒரு மென்மையான படுக்கையை எற்பாடு செய்தார்..உபசரிப்பில் மயங்கிய கொசு, தூக்கத்தில் ஆழ்ந்திருக்க, அதன் காதருகில் சென்ற சர்தார் பாடினார்.. ‘‘ங் கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ’’ அதிர்ச்சி அடைந்த கொசு அதே இடத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தது..!

………………….

* சர்தார் அமெரிக்காவில் உள்ள ‘நாசா’வில் வேலைக்கு சேர்ந்தார். ஒரு மாதம் கழித்து நாசா வின் பெயர் மாற்றப்பட்டு விட்டது. ‘சர்வ நாசா’.

……………………..

* அண்ணா சாலையில் சர்தார் குதிரையில் வந்தார். ட்ராபிக் எச்சரிக்கை விளக்கை மதிக்காமல் மேற்கொண்டு செல்லவே காவலர் விசில் ஊதினார். சர்தார் குதிரையின் வாலை கையால் தூக்கி, ‘நம்பர் ப்ளேட் பாத்துக்கோ’ என்றார்..!

………………………….

* ஒரு முறை நம்ம சர்தார் அவசர அவசரமா ரோட்டுல போயிக்கிட்டு இருந்தாரு, அந்த நேரத்துல ஒரு காக்கா நடு மண்டையில நச்சுனு ‘கக்கா’ போயிடுச்சி. நம்ம சர்தாருக்கு வந்தது பாருங்க கோவம், ‘‘ஏய் காக்கா! உனக்கு அறிவுல்லை, ஜட்டி போடுற பழக்கமெல்லாம் உனக்கு இல்லையா’’ன்னு  கத்துனார்.

நடு ரோட்டுல அதுக்கு அந்த காக்கா கேட்டிச்சாம், ‘‘அடங்கொக்கா மக்கா! நீயெல்லாம் ஜட்டியில கக்கா போவியா?”….

————————————————————

சர்தார்: இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க.

நண்பர்: நீங்க கேட்டீங்களா?

சர்தார்: நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங்க…

……………………………………………………………………..

டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க…!

சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?

………………………………………………………

ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார், ‘‘வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக் கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கருப்பாகி விடும்….’’ என்று சொல்ல, குழம்பிப்போன சர்வர் கேட்டார், ‘‘சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?’’

நம் சர்தார்ஜி சொன்னார், ‘‘மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்’’ என்றபடி கிளம்பினார்.

Leave a Comment