சிரிப்புக்கு நாங்க கேரண்டி
என்னதான் பூமி சூரியனைச்
சுற்றிச் சுற்றி வந்தாலும்
பூமிக்குச் சூரியன் பிக் அப் ஆகாது…
——————————————————————————–
வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம். போகும்போது என்னத்தைக்கொண்டு போகப் போறோம்?னு நீ டயலாக் விடும்போது, எல்லாரும் உன்மூஞ்சியைப் பார்த்தாங்க. நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன்.
எங்கேயிருந்துடா சுட்டே அந்த புது செருப்பை!
——————————————————————————–
உன்னைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் டிக்கெட் எடுத்தால்தான் மிருகக் காட்சிச் சாலைக்குள் விடுவேன் என்று சொல்கிறார் காவல்காரர்
——————————————————————————–
கெழக்கு செவக்கையிலே…
டாஸ்மாக் தொறக்கயிலே…
நீ பீரு குடிக்கையிலே…
உங்க அப்பா அங்க வந்துட்டாராமே…
மச்சான் மாட்டிக்கிட்டியா?
——————————————————————————–
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவள் மாம்பழம் வேணுமென்றாள்.
நல்ல வேளை… டாஸ்மாக்ல
நீ நிக்கலை!
——————————————————————————–
என்ன மாமூ…
புதுசுபுதுசா தினுசுதினுசா
இவ்வளவு பர்ஸ் வெச்சிருக்கே.
ஒருவேளை கண்டதும் சுட உத்தரவு-னு
பேப்பர்ல போட்டிருந்த செய்தியை
நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டியா என்ன?!
——————————————————————————–
நண்பா
ஒரு பொண்ணு போட்டவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்ல
பிசாசு மாதிரிதான் இருப்பா
——————————————————————————–
நண்பா
அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால்
சைட் அடிச்சா வலிக்காது
…………………………………………………………………………………………….
ஓட்டல்ல காசுக் கொடுக்கலன்னா
மாவாட்டச் சொல்வாங்க
பஸ்ல காசுக் கொடுக்கலன்னா
பஸ் ஓட்டச்சொல்வாங்களா?
…………………………………………………………………..
நண்பா உன் எதிர்காலம்
நீ காணும் கனவுகளில்தான் இருக்கிறது!
அதனால… சீக்கிரமா
தூங்கப் போடா கண்ணு!
……………………………………………………………………………………………………….
உன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள்!
…………………………………………………………………………….
பாம்பாட்டி பாம்பைக் காட்டி
பொழப்பு நடத்தறான்.
குரங்காட்டி வித்தை காட்டி
பொழப்பு நடத்தறான்.
நீ மட்டும் எப்படி மாமு
பல்லைக் காட்டியே பொழப்பை ஓட்டறே?
…………………………………………………………………………………………
என்னதான் கராத்தேல
பிளாக்பெல்ட்டுனாலும்
தெருநாய் தொரத்தினா
ஓடத்தான் செய்யணும்.
——————————————————————————–
வாழை மரம்
‘தார்’ போடும்
ஆனால் அதை வச்சு
நம்மால
‘ரோடு’ போட முடியாதே!
உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா?
என்னது இல்லையா?
அதுசரி, சும்மாவா சொன்னாங்க
“கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!!!”