டாபிக்கை மாத்திட்டாங்களே
தமிழ்நாட்டு மக்களுக்கு தி.மு.க. அரசு என்ன செய்தது என்று என்னுடன் விவாதத்திற்கு வர ஸ்டாலின் தயாரா..? எங்கள் ஆட்சியில் என்ன செய்தோம் என்று நான் எந்த குறிப்பும் தயார் செய்யாமல் வருகிறேன் என்று சவால் விட்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், ‘நான் வரலாமா?’ என்று கிண்டல் செய்திருந்தார்.
உதயநிதியின் கிண்டலுக்கு அ.தி.மு.க. அதிரடியாக பதில் கொடுத்துள்ளது. அ.தி.மு.க. டீம் இது குறித்து, ‘’உங்களுடன் விவாதம் செய்யலாம். ஆனால், என்ன விவாதம் என்பதை முடிவு செய்வோம். முதலில் நீட் தேர்வு ரகசியம் என்ன? யாருக்காக கார் ரேஸ் நடத்துனீங்க அப்படின்னு பேசுவோம்.
அதேபோல் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து எத்தனை திரைப்படம் தயாரிச்சு வெளியிட்டு இருக்கிறது ரெட் ஜெயன்ட் மூவீஸ்? நிதி அமைச்சர் சொன்னாரே அந்த 30000 கோடியை என்ன செஞ்சீங்க? கடைசியாக பால்டாயில் குடிச்சது உண்மை தானே? இப்படி எல்லாம் பேசலாம். என்ன நீங்க ரெடியா?’’ என்று கேட்டுள்ளனர்.
அதோடு, ‘’விவாதத்துக்கு வருவதாகச் சொல்லும் வாரிசு துணை தம்பியே, அப்பாவாச்சும் துண்டு சீட்டு… நீ கட்டு கட்டா பிட்டு பேப்பரோட வருவியே தம்பி ! உனக்கு லாம் அண்ணா திமுக கிளை செயலாளர் போதும்’’ என்று கிண்டல் செய்கிறார்கள்.
சுவாரஸ்யமா இருக்குதே. சீக்கிரம் நடத்துங்க.