• Home
  • அரசியல்
  • அண்டம் கிடுகிடுக்க ராமதாஸ் போராட்டம்.?

அண்டம் கிடுகிடுக்க ராமதாஸ் போராட்டம்.?

Image

இப்படி பேச ஆரம்பிச்சுட்டாரே.

அரசியல் கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் டாக்டர் ராமதாஸ் ஒரு மூன்றாம் தர பேச்சாளர் போன்று பேசியிருப்பது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, ‘நீ யாரு.. இது எங்க பூமி. உங்கிட்ட போய் 10.5 % நான் கேட்கணுமா? எனக்கு அவமானமா இருக்கு? உன்னைப்போய் கோட்டையில் நான் சந்திக்கணுமா? எனக்கு அவமானமா இருக்கு? சாதிவாரி கணக்கெடுப்பு உன்னை நடத்த சொன்னால் நீ மத்திய அரசை கைகாட்டுற… இங்கே உள்ள ஊமை ஜனங்கள் 2 மாதத்தில் பேசப்போறாங்க. ஊமை ஜனங்களுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்ததுன்னு எல்லோரும் கேட்கும் வகையில் போராட்டம் நடத்தப் போறோம். ஆட்சியில் இருப்பவர்கள் அதிகாரத்தை விட்டு ஓடும் வகையில் பெரும் போராட்டம் நடத்தப் போறோம். ஏதோ நடக்கபோகுது நடத்திக் காட்டப் போறோம். அண்டம் கிடுகிடுன்னு நடுங்கப்போகுது..’’ என்று பேசியிருக்கிறார்.

ராமதாஸின் இந்த பேச்சு அத்தனை கட்சியினரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது. ஏனென்றால், நேரத்துக்கு ஏற்ப கூட்டணிக்கு ஏற்ப பேசுவது ராமதாஸின் ஸ்டைல்.

அதிமுகவோடு கூட்டணி வைக்கும்போது திமுகவை ஒழிக்கணும் என்பார். .பாஜகவுடன் கூட்டணு வைக்கும்போது திராவிடக் கட்சிகளோட கூட்டணி வைக்கிறது பெத்த தாயோட உறவு வைப்பதற்கு சம்மனு சொல்வார். பின்னர் கூட்டணி வைத்து அதற்கும் ஒரு விளக்கம் சொல்வார். .நீதிமன்றத்துல செல்லாதுனு தெரிஞ்சே எடப்பாடி 10.5 % கொடுத்துட்டாருனு ஃபோன்ல அழுது ட்ராமாவ போட்டு வாக்குகளை அள்ளிவிட ஆசைப்பட்டு அதில் தோல்வியைத் தான் சந்தித்தார்.

நானோ என்னுடைய வாரிசுகளோ எந்த பதவிக்கும் வரமாட்டோம் என்பதை வசதியாக மறந்துவிட்டு மகன், மருமகள், பேத்திகளை எல்லாம் களத்தில் இறக்கிவிட்டுள்ளார். இவர் அடுத்தவருக்கு நியாயம் நீதி பற்றி பாடம் எடுப்பது விநோதம் என்று அவரது கட்சியினரே கிண்டல் செய்கிறாரக்ள்.

Leave a Comment