ஆண் சைக்காலஜி
அழகான மனைவி பக்கத்தில் இருந்தாலும் அக்கம்பக்கப் பெண்களை திருட்டுத்தனமாகப் பார்க்கும் சபலம் எல்லா ஆண்களுக்குமே இருக்கிறது என்பது தான் சைக்காலஜி.
ஆண்களில் ராமன் கிடையாது, பூனையில் சைவம் கிடையாது என்று வைரமுத்து சினிமா பாடலை அப்படியே மனோதத்துவ நிபுணர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.சபலப்படும் புத்தியில் மட்டும் மற்ற உயிரினங்களின் குணம் ஆணின் ஜீன்களில் மாறாமல் உள்ளது என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். அவர்களுடைய கூற்றுப்படி, ’பிறன்மனை நோக்கா பேராண்மை என்பது இந்த உலகத்தில் எந்த ஆண் மகனுக்கும் இல்லை. அப்படி ஒருவன் இருந்தால், அவனுக்கு ஆண்மை குறைவாகவும் பெண் தன்மை அதிகமாகவும் இருக்கும்.
ஏனென்றால், ஆண் உடல் நோக்கமே அதிக எண்ணிக்கையில் உயிர்களைப் பரப்புவதாகவே இருக்கிறது. ஒருவன் நல்ல கணவனாக, நல்ல அப்பாவாக இருக்கலாம். அதன் அர்த்தம் அவன் சபலத்தைக் கடந்தவன் என்ற அர்த்தம் இல்லை.
அதேநேரம் ஆணுக்கு பெண்ணை விட அதிக பயம் உண்டு. அதனால் ஜொள்ளு விடுவதுடன் நிறுத்திக்கொள்கிறார்கள். பெண் சிக்னல் கொடுத்த பிறகே நெருங்குவார்கள் அல்லது பெண் சிக்னலுக்காக பல்வேறு சேட்டைகள் செய்வார்கள். ராமனை ஏக பத்தினி விரதன் என்பார்கள். தெய்வப் பிறவி என்பதால் அப்படி இருந்திருக்கலாமே தவிர, மனிதனாகப் பிறந்தவர் சபலமின்றி இருக்கவே முடியாது. கடுமையான சட்டங்கள் மூலம் ஆண் தவறு செய்வதை தடுத்து நிறுத்தலாம் ஆனால், சபலப்படுவதை எத்தனை தடை போட்டாலும் நிறுத்தவே முடியாது’ என்கிறார்கள்.