நெருப்பூ
வாசகர்களிடம் பாராட்டு வாங்குவதே எழுத்துக்குக் கிடைக்கும் மிகப்பெரும் போதை. அப்படி ஒரு பாராட்டு எழுத்தாளரிடமிருந்து, அதுவும் 1,500 நாவல்கள் எழுதிய க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரிடமிருந்து கிடைக்கிறது என்றால், இதுவே எனக்கு வரப்பிரசாதம்.
விறுவிறுப்பும் சுவாரஸ்யமுமாக 55 ஆண்டுகளாக எழுதிக்கொண்டே இருக்கும் எழுத்துலக மார்க்கண்டேயன் ராஜேஷ்குமார் எனது, ‘நெருப்பூ’ இதிகாச நாவலுக்கு வழங்கியிருக்கும் மதிப்புரை இது.…
’’மஹாபாரதக் கதை எனக்கு முழுமையாகத் தெரிந்தாலும் சிகண்டியாக மாறிய அம்பையின் கதை மட்டும் சற்று புகை படிந்த காட்சிகளைப் போல் தெளிவில்லாமல் தெரியும். தொலைக்காட்சிகளில் அந்தத் தொடரை நேரம் கிடைத்தபோது பார்த்திருக்கிறேன். பார்க்கப் பார்க்க புரிவது போல் இருக்கும். அதன் பிறகு பழைய குழப்பம் வந்து சிகண்டி பாத்திரம் ஒரு புதிராக மாறிவிடும்.
எல்லா குழப்பத்துக்கும் காலம் பதில் சொல்லும் அல்லவா..?
என்னுடைய சிகண்டி குழப்பத்துக்கும் எஸ்.கே.முருகன் மூலமாக ஓம்சக்தி மாத இதழில் அவர் எழுதிவந்த தொடர் மூலமாக விளக்கமான பதில் கிடைத்தது.
யாராலும் வீழ்த்தமுடியாத பீஷ்மரை அம்பை ஒரு அம்பாக மாறி எப்படி நிலைகுலைய வைத்தாள் என்பதை அவர் வீரியம் மிக்க வார்த்தைகளால் விவரித்தபோது பிரமித்துப் போனேன்.
பீஷ்மன் என்னை மணம் புரிந்துகொள்ள வேண்டும், அதுதான் எனக்கு கிடைக்க வேண்டிய நீதி என்று அம்பை நடத்திய போராட்டத்தை உண்மையிலே கண் முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் முருகன்.
இதை நான் ஒரு கட்டுரைத் தொட்ராக நினைக்க முடியவில்லை, ஒரு காவியமாக அங்கீகரிக்கத் தோன்றுகிறது.
மாதாமாதம் அத்தியாயம் அத்தியாயமாக படித்ததைக் காட்டிலும் ஒரு புத்தகமாக கையில் வைத்துப் படிக்கும்போது பூமாலையின் நறுமணம் போன்ற உணர்வைப் பெற முடிகிறது.
சிகண்டி ஒரு நெருப்பு மலர் என்பதை நெருப்பூ என்கிற தலைப்பிலேயே நமக்குப் புரிய வைத்துவிடுகிறார் முருகன் அவர்கள்.
எழுத்தாளனான என்னையே பிரமிக்க வைத்த இந்தப் புத்தகம் வாசகர்களை அப்படியே கட்டிப் போட்டுவிடும்.
இலக்கிய அமைப்புகள் படித்துவிட்டு என்ன விருது கொடுத்து, ‘நெருப்பூ’வை கெளரவிக்கலாம் என்று யோசிக்க வேண்டி வரும்.
வாழ்த்துக்கள் முருகன்.
அன்புடன் ராஜேஷ்குமார்
ஞானகுரு பதிப்பகம்
வண்ணப் புத்தகம் – 600 ரூபாய்
கருப்பு வெள்ளை – 300 ரூபாய்
இ-புக் – 150 ரூபாய்
80725 89355 செல்போன் எண்ணுக்கு பணம், முகவரி அனுப்புங்கள். எங்கள் செலவில் புத்தகம் அனுப்பிவைக்கப்படும்
க்யூ ஆர் கோடு மூலமாகவும், வங்கிக் கணக்கிலும் பணம் அனுப்பலாம்.
GYANAGURU PUBLICATION, UNION BANK OF INDIA, IFS CODE : UBIN0554847, Current Account No. 548401010050639