என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 86
1961ம் ஆண்டு. ஒரு கன மழை பெய்த நேரத்தில் கோடம்பாக்கத்தில் ரயில்வே கேட் மூடிக்கிடக்கிறது. அப்போது மேம்பாலம் கட்டப்படவில்லை என்பதால் நீண்ட வரிசையில் சைக்கிள்கள், இருசக்கர வாகனங்கள், ரிக்ஷாக்கள், கார்கள் காத்துக் கிடக்கின்றன. அந்த கன மழையில் ஒரு வயதான மனிதர் உடல் தெப்பலாக நனைந்திருக்க, கை ரிக்ஷாவை பிடித்தபடி கிடுகிடுவென நடுங்கிக்கொண்டிருக்கிறார்.
அங்கு காத்திருந்த அத்தனை பேரும் அந்த காட்சியை பார்த்தார்கள் என்றாலும், காருக்குள் இருந்து அதனை பார்த்த ஒரே ஒரு மனிதருக்கு மட்டும் கண்ணில் ரத்தக்கண்ணீர் வடிகிறது. வீடு திரும்பியதும் உடனடியாக தமிழகத்தில் உள்ள அத்தனை ரிக்ஷா தொழிலாளிகளுக்கும் மழைக்கோட்டு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்கிறார். அந்த மனிதநேயர் தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அன்றைய தினத்தில் தமிழகத்தில் உள்ள அத்தனை ரிக்ஷா தொழிலாளிகளுக்கும் 3 லட்சம் ரூபாய் செலவில் மழைக்கோட்டு வழங்கினார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் மனிதநேயத்தின் வழியைப் பின்பற்றி சேவை மனப்பான்மையுடன் வாழ்ந்துவரும் சைதை துரைசாமிக்கு, விளிம்புநிலை மக்கள் கொசுவுடன் போராடும் காட்சி கடும் வேதனையைக் கொடுத்தது. நீர்நிலைகளுக்கு அருகே வசிக்கும் அந்த மக்களால் தினமும் கொசுவர்த்திச் சுருளும், கொசுவிரட்டி திரவமும் வாங்குவதற்கு முடியாத நிலையும் இருந்தது.
எனவே, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அனைவருக்கும் விலையில்லா கொசுவலை திட்டத்தை சென்னை மாநகராட்சியில் மேயர் சைதை துரைசாமி அறிமுகம் செய்தார். சுமார் 10 கோடி ரூபாய் செலவில் விலையில்லா கொசுவலை கொடுத்து, சுமார் 6 லட்சம் குடும்பத்தினரை கொசுவினால் பரவும் நோய்களில் இருந்து காப்பாற்றினார். கொசு மருந்து, கொசு சுருள்களைவிட, கொசு வலையே நீண்டகாலம், உறுதியாக பயன் தரக்கூடியது என்பதாலே, கொசுவலையை தேர்வு செய்து வழங்கினார். ஏழை எளிய மக்களின் நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகை செய்தார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.