• Home
  • அரசியல்
  • வினேஷ் போகத்தை எம்.பி.யாக்கும் ராகுல் காந்தி?

வினேஷ் போகத்தை எம்.பி.யாக்கும் ராகுல் காந்தி?

Image

இப்போது என்ன செய்வார் மோடி..?

பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பாலியல் புகார் குற்றச்சாட்டை தெரிவிக்க வேண்டும் என்று போராடினார் வினேஷ் போகத். ஆனால், அது நடக்கவே இல்லை. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் வெற்று பெற்று மெடலுடன் நேருக்கு நேர் பிரதமரை சந்தித்து, நியாயம் கேட்பதற்கு வாய்ப்பு வந்தது.

ஆனால், நூறு கிராம் எடை வித்தியாசம் காரணமாக இறுதிப்போட்டியில் பங்கேற முடியாமல் போனதுடன், வெள்ளிப் பதக்கமும் பறிக்கப்பட்டது. இந்த சதிக்கு அம்பானி மருத்துவமனையின் டாக்டரே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.

இவர் தான் வினேஷ் போகத்தின் எடையை கவனிக்கும் நியூட்ரியனிஸ்டாக இருக்கிறார். யாரோ ஒரு சிலர் அறிவுரையின்பேரில் வினேஷ் போகத் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் ஆடக்கூடாது என்பதற்காக இந்த சதியை நிகழ்த்தியுள்ளதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.

இப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதனாலே தன்னுடைய சொந்த நியூட்ரிஷ்யன், பிசியோதெரபிஸ்ட்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவை நிராகரிக்கப்பட்டுள்ளன. எல்லா வகையிலும் தோல்வி அடைந்த வினேஷ் போகத், “மல்யுத்தம் என்னை போட்டியிட்டு வென்றுவிட்டது. நான் தோற்றுவிட்டேன். என்னுடைய உத்வேகம் அனைத்தும் உடைந்துவிட்டது. என்னிடம் இப்போது எந்த வலிமையும் இல்லை. 2001 – 2024 மல்யுத்தத்துக்கு குட் பை” என்று பதிவு போட்டிருக்கிறார்.

இந்த பதிவு அத்தனை கோடி இந்தியர்களின் மனதையும் புண்படுத்திவிட்டது. இது குறித்து இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டதை பா.ஜ.க. அரசு ஏற்கவில்லை.

அதேநேரம், இறுதிப்போட்டிக்கு முந்தின நாள் வரை கூடாத வெயிட் திடீர்ன்னு கூடுற அளவுக்கு அவங்க டயட் பிளான் செட் பண்ண ஆளு யார்? 100.கி வெயிட் கூட பிரச்சினைக்கு உள்ளாகும்னு கூட கேர் பண்ணாத அளவுக்கு இருந்த ட்ரெயினர், நியூட்ரினிஸ்ட்ட ஏன் விசாரிக்கல? தகுதிநீக்கம் பண்ற முன்னாடி அப்பீல் பண்ண வாய்ப்பு இருந்தும் இந்திய சம்மேளம் சார்பா ஏன் யாரும் அப்பீல் பண்ணல என்று மக்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்த நிலையில் ஹரியானா மாநில அரசு அவருக்கு வெள்ளிப்பதக்கம் வென்றவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள மதிப்பும் மரியாதையும் வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்திருக்கிறது. அதோடு ஹரியானாவில் இருந்து அவரை எம்.பி.யாக தேர்வு செய்வதற்கு ராகுல் காந்தி திட்டம் வகுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து ஹரியானா மாநிலத்தில் இருந்து எம்.பி. பதவி காலம் முடிவுக்கு வரும் தீபேந்தர் ஹூடாவும், வினேஷ் போகத் விரும்பினால் என்னுடைய பதவியைத் தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

நேரடியாக சந்திக்கப் பயந்த மோடியை வினேஷ் போகத் நாடாளுமன்றத்தில் சந்தித்து நியாயம் கேட்கும் நாள் விரைவில் வரட்டும்.

Leave a Comment