ராகுல் காந்தியின் தரமான சம்பவம்

Image

மோடி, அமித்ஷா ஒம் பிர்லாவுக்கு ஷாக்

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அனல் பறக்கும் பேச்சு இந்தியா முழுக்க எதிரொலித்துள்ளது. பத்து ஆண்டுகளாக ராஜாங்கம் செய்துகொண்டிருந்த நரேந்திர மோடியும் சபாநாயகர் ஓம் பிர்லாவும் வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று பேசிய ராகுல் காந்தி, ‘’மோடி தான் மொத்த இந்து சமுதாயம் அல்ல. பாஜக முழு இந்து சமுதாயத்தின் பிரதிநிதி அல்ல. RSS ஒட்டுமொத்த இந்து சமுதாயத்துக்கும் தலைவர் அல்ல. இவையெல்லாம் பாஜக க்கு எழுதி கொடுக்கவில்லை. நான் ஒரு இந்து. ஆனால் பாஜக வை எதிர்க்கும் உண்மையான இந்து. பாஜவை என் ரத்தத்திற்கு உயிர் உள்ளவரை எதிர்ப்பேன்’’ என்று கூறியிருக்கிறார்.

அதோடு, சிவன் படத்தைப் பார்க்கும்போது இந்து பயத்தை ஏற்படுத்த மாட்டார், இந்து வன்முறை செய்ய மாட்டார். இந்து வெறுப்பை பரப்ப மாட்டார் என்பது புரியும். ஆனால் பா.ஜ.க. 24 மணி நேரமும் வெறுப்பை பரப்புகிறது, வன்முறையை விதைக்கிறது. வெறுப்பு, வன்முறை, வெறுப்பு, வன்முறையைத் தொடர்கிறது.

எங்கு எங்கெல்லாம் இவர்கள் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். நாமெல்லாம் பயாலஜிக்கலாக பிறந்தவர்கள். ஆனால் பிரதமர் மோடி பயாலஜிக்கல் அல்ல. கடவுளிடம் நேரடியாக பேசக்கூடியவர்.

ஓம் பிர்லாவுடன் நான் கை குலுக்கிய போது ஒரு விஷயத்தைக் கவனித்தேன். நான் கை குலுக்கியபோது நிமிர்ந்து நின்று கை கொடுத்தார். அதே மோடி கை கொடுத்தவுடன் குனிந்து கை கொடுக்கிறார். மோடிஜி தயவுசெய்து எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இந்த முறை குஜராத்தில் இண்டியா கூட்டணி உங்களை தோற்கடிக்கப் போகிறது’’ என்று அனல் தெறிக்கப் பேசினார்.

ராகுல் பேச்சைக் கேட்டு அதிர்ந்துபோன பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷா உள்ளிட்ட 240 எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டார்கள். ஆனாலும் தனி ஒருவனாக நின்று பா.ஜ.க.வை தெறிக்கவிட்டுள்ளார் ராகுல்.

Leave a Comment