போர்க்களமான நாடாளுமன்றம்
பட்ஜெட் மீதான இறுதிக்கட்ட விவாதத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி இன்று பிரதமர் நரேந்திர மோடியையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
ராகுல்காந்தி பேசுகையில், ‘’நடுத்தர வர்க்கத்தினரை பிரதமர் விளக்கு ஏற்ற சொன்னார், அதை செய்தார்கள் கைதட்ட சொன்னார் , கேள்வி கேட்காமல் அதையும் செய்தார்கள் பிரதமர் சொன்ன அனைத்தையும் செய்தார்கள் ஆனால் அந்த நடுத்தர வர்க்கத்தினரை நெஞ்சிலும் முதுகிலும் பட்ஜெட் என்ற பெயரில் குத்தியிருக்கிறார்’’ என்ற ராகுல் காந்தி நிதியமைச்சர் அல்வா கிண்டிய போட்டோ காண்பித்தார். உடனடியாக கேமரா ஆஃப் செய்யப்பட்டது.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, ‘பட்ஜெட்டுக்கு முன் அல்வா தயாரிக்கும் நிகழ்வில் பழங்குடியினர், ஒபிசி பிரிவினர், சிறுபான்மையினர் ஒருவரும் இல்லை நாட்டு மக்களுக்கு அல்வா கொடுப்பதற்காக 20 பேர் இணைந்து பட்ஜெட் தயாரித்துள்ளனர், ஆனாலும் மத்திய அரசின் பட்ஜெட் அல்வா பெரும்பாலானோருக்கு கிடைக்கவில்லை.
நான் என்ன புகைப்படத்தை காட்ட விரும்புகிறேன் என்பதை கூட பார்க்காமல் நீங்கள் தொலைக்காட்சியை அணைத்து வைக்கிறீர்கள் பாருங்கள் இப்போது கூட நீங்கள் தொலைக்காட்சியை மாற்றி விட்டீர்கள் என நிர்மலா சீதாராமன் அல்வா செய்த புகைப்படத்தை காட்ட முற்பட்டபோது ராகுல் காந்தி மீண்டும் சிரித்தபடி பேச எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மேஜை தட்டி சிரித்தனர்
நிதியமைச்சர் இங்கு அமர்ந்திருக்கிறார் நான் அவரிடம் நேரடியாக கேட்க வேண்டி இருக்கிறது இந்திய இளைஞர்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள் நீங்கள் இன்டர்ன்ஷிப் ப்ரோக்ராம் என்பதை கொடுத்திருக்கிறீர்கள் அதை பெரு நிறுவனங்கள் பலன் பெரும் வகையில் தான் வடிவமைத்திருக்கிறீர்கள் என குற்றம் சாட்டியவர், அடுத்ததாக அம்பானி அதானி என்ற பெயரை சொன்னதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. உடனே அவர்களை ஏ1 ஏ 2 என குறிப்பிடவே ஆளுங்கட்சி தரப்பு எம்.பி.கள் கூச்சலிட்டு எதிர்ப்பு பதிவு செய்தனர்.
மேலும் பேசுகையில், ‘’நாட்டில் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு மூலம் மக்கள் மீது தாக்குதல் நடைபெறுகிறது பாஜக ஆட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள் ஒருவித அச்சத்துடனே உள்ளனர் மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் அபிமன்யு மாட்டிக் கொண்டதைப் போல மோடி ஆட்சியில் நாடு மாட்டிக் கொண்டுள்ளது.
ஆனால், சக்கிர வியூகத்தால் மகாபாரத யுத்தத்தில் வீழ்ந்த அபிமன்யு அல்ல. நாங்கள் அர்ஜுனர்கள் அம்பானி அதானிக்கு ஆதரவாக நீங்கள் வகுத்துள்ள வியூகத்தை இந்தியா கூட்டணி உடைக்கும்’’ என்று ராகுல் பேசி கதறடித்திருக்கிறார் ராகுல்.