ஞானகுரு :
அங்கீகாரம் பிறரிடம் இருந்து கிடைக்க வேண்டும் என்பதற்காக நேர்மையாக இருப்பது முட்டாள்தனம். நல்லவராக இருப்பதற்காக உங்களைப் பாராட்டி, வானத்தில் இருந்து தேவர்கள் பூமழை பொழிவார்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள். நேர்மையாக இருப்பதால் உங்களுக்கு எந்தக் கெட்டதும் நடக்காது என்று நம்பினாலும் ஏமாந்து போவீர்கள். நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பது உங்களுக்குப் பிடித்திருக்கிறது, நிம்மதி தருகிறது என்றால் மட்டும் அப்படி இருங்கள். அப்படி இல்லை என்றால் நீங்களும் கெட்டுப் போகலாம். யாரும் உங்கள் கையைப் பிடித்து தடுக்கப் போவதில்லை.
gyaanaguru.com Changed status to publish
