ஞானகுரு ;
வர்த்தமான மகாவீரர் மரணம் அடைந்த நாளையே தீபாவளியாக கொண்டாடுகிறோம் என்று சொன்னால் நம்புவதற்கு சிரமமாக இருக்கலாம். ஆனால், அதுவே உண்மை. ஒரு காலத்தில் இந்தியா முழுக்க சமண மதமே கொடி கட்டிப் பறந்தது. வர்த்தமான மகாவீரரை மரணம் நெருங்கியபோது, ‘என்னுடைய மரணத்துக்கு யாரும் துக்கம் அடையக்கூடாது. புத்தாடை அணிந்து, இனிப்பு வழங்கி கொண்டாடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார். அதையே கொண்டாடினார்கள்.
ஆரியர் படையெடுப்புக்குப் பின்னர் இந்த பண்டிகையை, நரகாசூரனை வதம் செய்த நாளாக மாற்றிவிட்டார்கள். பூமியை பாயாக சுருட்டிய அசுரன், வராக அவதாரம், பூமாதேவி, நரகாசூரன் ஆகிய எதற்கும் வரலாறு கிடையாது. ஆனால், வர்த்தமான மகாவீரருக்கு இருக்கிறது. தேடிப் படியுங்கள். உண்மை தெரியவரும்.
gyaanaguru.com Changed status to publish October 25, 2024