ஞானகுரு :
புனிதமான நகரம் என்று உலகில் எதுவுமே இல்லை. எல்லா இடங்களும் புனிதமானவை தான். அதனால் புதுப்புது இடங்களை, புதுப்புது மனிதர்களை சந்திப்பது நல்ல அனுபவமும் உற்சாகமும் தரும் என்பதே உண்மை.
புனித நகரம் என்பது மாயை என்பதற்கு சமீபத்திய உதாரணம் மெக்கா. இஸ்லாமியர்களின் புனித பூமியான மெக்காவில் வரலாறு காணாத அளவுக்கு வீசிய வெப்ப அலை காரணமாக இந்த ஆண்டு கிட்டத்தட்ட 750 பேர் செத்துப் போயிருக்கிறார்கள். மனிதர்களை கொல்லும் இடம் தான் புனித இடமா..?
புனித நகரம் என்றால் அங்கே மக்களுக்கு எந்த துன்பமும் தொந்தரவும் வரக்கூடாது. இஸ்லாமியர்களின் மெக்கா, கிறிஸ்தவர்களின் ஜெருசலேம், இந்துக்களின் காசி, புத்த சமயத்தினரின் கயாவில் வசிக்கும் மக்களுக்கு துன்பமே வருவதில்லையா..? அங்கே வாழும் அத்தனை பேரும் சொர்க்கத்தில் இருப்பது போன்று சுகமாக வசிக்கிறார்களா..? கேள்வி கேட்கத் தெரிந்தவருக்குப் பதில் கிடைத்துவிடும்.