ஞானகுரு :
இந்த பிரபஞ்சத்தில் பிரமாண்டத்திலும் பிரமாண்டமான கிரகங்கள் தங்கள் வேலையை செய்துகொண்டே இருக்கின்றன. சூரியனின் பிரமாண்டத்தில் நம் பூமி ஒரு குட்டியூண்டு கல். அப்படிப்பட்ட பூமியில் வாழும் மனிதர்கள் எல்லாம் சூரியனுக்கு தூசு.
இந்த பூமியில் கோடிக்கணக்கான உயிர்கள் இருக்கும் நிலையில், கன்னியாகுமரியில் இருக்கும் ரவீந்திரனின் வாழ்க்கையில் விளையாடுவதற்கு சூரியன் மெனக்கெடுகிறது என்று நினைப்பதே நகைச்சுவையாக இல்லையா..? கடலும் மலையுமே சூரியனுக்கு ஒரு பொருட்டு அல்ல எனும் நிலையில், காசுக்காக ஜோதிடர்கள் வீசும் வஞ்சக வலையில் மாட்டிக்கொண்டு விழிக்காதீர்கள்.
எல்லோருக்கும் மரணம் நிச்சயம். யாருடைய மரணத்தையும் இது வரை யாராலும் தடுத்து நிறுத்த முடிந்ததில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். எப்படியும் மரணம் வரவே போகிறது என்பதால் எது நடந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொள்ளுங்கள்.
