Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : ஒரு தலித்தை முதல்வராக ஏற்றுக்கொள்கிற நிலை இங்கே இல்லை, வர முடியாது என்று திருமாவளவன் பேசியிருக்கிறாரே..? – சி.கெளதமன், சென்னை.

227 viewsAugust 14, 2024
0
gyaanaguru.com August 14, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 14, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 14, 2024 0 Comments

ஞானகுரு :

ஒரு தலைவருக்கும் முதல்வருக்குமான வித்தியாசத்தை இன்னமும் திருமாவளவன் உணர்ந்துகொள்ளவில்லை. தமிழகத்தின் முதல்வராக இருந்த ராஜாஜி, காமராஜர் தொடங்கி அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மு.க.ஸ்டாலின் ஆகியோர் என்ன ஜாதி என்று பார்த்து சாதாரண பொதுமக்கள் ஓட்டு போடுவதில்லை. அந்த சாதாரண மக்கள் தான் தேர்தல் தலையெழுத்தை மாற்றுபவர்கள். தங்கள் முதல்வர் யாரென தீர்மானிப்பதற்காக வாக்களிக்கிறார்களே தவிர, அவர்கள் ஜாதிக்காக அல்ல.

எல்லா தலைவர்களும் முதல்வராக மாற முடியாது. திருமாவளவன், ராமதாஸ், கிருஷ்ணசாமி போன்றவர்கள் இன்னமும் தங்கள் ஜாதிக்கு தலைவராக இருக்கிறார்களே தவிர, தனிப்பெரும் தலைவர்களாக உருமாறவில்லை, அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை. அப்படியொரு தனிப்பெரும் தலைவர் தலித் சமயத்தில் உருவாகும் சூழலில் அவரை நிச்சயம் முதல்வராக அமர வைப்பார்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இண்டியா கூட்டணி ஜெயித்திருந்தால் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை விட மல்லிகார்ஜுனே கார்கேவைத் தான் மற்ற தலைவர்கள் தேர்வு செய்திருப்பார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. அவர் தலித் என்பதற்காக அல்ல, மூத்த தலைவர் என்பதற்காக. திருமாவளவன் இன்னமும் ஜாதியின் பிடியில் இருந்து வெளியே வரவில்லை என்பதையே அவரது பேச்சு காட்டுகிறது.

 

gyaanaguru.com Changed status to publish August 14, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US