ஞானகுரு :
டீன் ஏஜ் என்பது குழந்தையில் இருந்து இளமைக்கு மாறும் காலகட்டம். உடல் ரீதியிலும் மன ரீதியிலும் மிகப்பெரும் மாற்றங்களை சந்திப்பார்கள். இந்த மாற்றங்களை சந்திக்கும் வழிமுறைகளை பெற்றோர் முன்கூட்டியே சொல்லித்தர வேண்டும்.
இந்த வயதில் காதல் வருவது நிச்சயம். ஆனால், அது காதல் அல்ல ஈர்ப்பு மட்டுமே என்பதை புரியவைக்க வேண்டும். கல்லூரி படிப்பு முடித்து வேலையில் சேரும் வரையிலும் காதல் என்று எதையும் நம்ப வேண்டாம் என்று சொல்லித்தர வேண்டும்.
அழகுக்காக கவலைப்படவும் தேவையில்லை, பெருமைப்படவும் எதுவும் இல்லை. பெற்றோரைத் தவிர வேறு யாரையும் எதற்காகவும் நம்ப வேண்டாம். இந்த காலகட்டத்தில் படிப்பது மட்டுமே ஒரே வேலை. இந்த வயதில் சிகரெட் குடிக்கவும், மது குடிக்கவும் ஆசை வருவது இயற்கை. ஆனால், அது தன்னம்பிக்கையையும் உடல் நலனையும் கெடுத்துவிடும். மேலும் சுய சம்பாத்தியத்தில் மட்டுமே ஒருவருக்கு சிகரெட், மது குடிப்பதற்கு உரிமை இருக்கிறது என்றெல்லாம் சின்னக் குழந்தையில் இருந்தே சொல்லிச் சொல்லி வளருங்கள். அப்படி சொல்லிச் சொல்லி வளர்த்தால் டீன் ஏஜ் வயதில் உங்களுக்கு தோழன் அல்லது தோழியாக பிள்ளை இருக்கும். இல்லையென்றால் அதுவே தொல்லையாக இருக்கும். சகித்துக்கொள்வது தவிர வேறு வழியில்லை.
