ஞானகுரு :
நேற்றைய காதலர்கள் தான் இன்றைய பெற்றோர் என்பதை மறந்து போகாதீர்கள். இத்தனை நாளும் அன்பு கொடுத்து வளர்த்த பிள்ளையிடம், தங்களுக்கு இருக்கும் உரிமை, பாசம், எதிர்பார்ப்பு எல்லாம் காணாமல் போய்விடுமே என்ற பயத்தினாலே காதலை எதிர்க்கிறார்கள். பள்ளி, படிப்பு, வாகனம், வேலை என்று எல்லாவற்றையும் நாமே தேர்வு செய்தோம், திருமணத்தை மட்டும் பிள்ளையே முடிவு செய்வதா என்ற அதிர்ச்சியும் முக்கிய காரணமாகிறது. அந்தஸ்து, ஜாதி, மதம் போன்றவை குறுக்கிடும்போது, எதிர்ப்பு இன்னமும் தீவிரமாகிறது. பிள்ளைக்கு விபரம் போதாது என்று பெற்றோர் நினைக்கிறார்கள். பெற்றோர்களுக்கு பெருந்தன்மை இல்லை என்று பிள்ளைகள் நினைக்கிறார்கள். இந்த விளையாட்டு காலம் உள்ளவரை நடந்துகொண்டேதான் இருக்கும். ஆனால், ஒன்று மட்டும் உண்மை. காதலில் உறுதியுடன் இருப்பவர்கள் ஒரு போதும் பெற்றோரின் எதிர்ப்பைக் கண்டுகொள்வதே இல்லை.
