ஞானகுரு :
நீங்கள் குழந்தையாக இருந்தவரை, கடவுள் என்றால் என்னவென்றே அறியாமல் இருந்தீர்கள். எப்போது, எந்த வகையில் கடவுள் பற்றி கற்பிக்கப்பட்டதோ, அன்று முதல் கோயில்களிலும், குளத்திலும், பூஜை அறையிலும் கடவுளை தேடத் தொடங்கிவிட்டீர்கள்.
தொலைந்து போன பொருட்கள் மட்டுமே தேடினால் கிடைக்கும். கடவுளை நீங்கள் கண்டுபிடிக்கவே இல்லை, பிறகு எப்படி தேட முடியும். உங்களுக்கு என்னவென்று தெரியாத ஒன்றை தேடிக்கொண்டு இருக்கிறீர்கள். முதலில் என்ன தேட வேண்டும் என்பதை அறிந்துகொண்டு தேடுங்கள். அதற்கு முன்பாக, கடவுளைத் தேடிக் கண்டுபிடித்து என்ன செய்யப் போகிறீர்கள் என்பதையும் முடிவு செய்துவிட்டு தேடுங்கள்.
gyaanaguru.com Changed status to publish
