ஞானகுரு :
கோயிலுக்கு டியூப்லைட் வாங்கிப்போட்டு, வெளிச்சம் தெரியாதபடி குண்டு எழுத்தில் பெயரை எழுதிவைப்பது அல்ல, தேவை அறிந்து உதவுவது சேவை. நன்கொடை கொடுத்தால் எவ்வளவு விளம்பரம் கிடைக்கும், வரிவிலக்கு இருக்கிறதா என்றெல்லாம் யோசிக்காமல், யாருக்கேனும் உதவி தேவை என்று தெரியவந்த அடுத்த கணமே உதவுவதன் பெயரே சேவை. இந்த உதவி செய்தால் பிற்காலத்தில் நன்மை கிடைக்கும், புண்ணியம் சேரும், சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்றெல்லாம் எண்ணி சேவை செய்கிறாய் என்றால், அது வியாபாரம். அதுவும் நஷ்டம் மட்டுமே கிடைக்கும் வியாபாரம். சேவை என்பது பணமாக, பொருளாக மட்டும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நேரமாகவும், அரவணைப்பாக, ஒரு சிரிப்பாகவும் இருக்கலாம்.
gyaanaguru.com Changed status to publish
