Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி சாலை விபத்துகளுக்குக் காரணம் தலைவிதியா..? எத்தனை கவனமாகச் சென்றாலும் விபத்து நடக்கிறதே..? – எம்.சந்திரமோகன், பெரியகுளம்.

201 viewsSeptember 25, 2024
0
gyaanaguru.com September 25, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 25, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 25, 2024 0 Comments

ஞானகுரு :

விதியே காரணம். ஆனால், இது நீங்கள் நினைக்கும் தலைவிதி அல்ல. சாலை விதிகள். ஒருவரின் அலட்சியம் பலருக்கு பாதிப்பை உண்டாக்குகிறது. சாலை விதிகளை நீங்கள் மட்டும் கடைபிடிப்பது போதாது, எதிரே வருபவரும் அப்படியே நடக்க வேண்டும். ஆனால், மனிதர்கள் மனதில் எப்போதும் சுயநலம் ஓங்கியே இருக்கும். தங்களுக்குத் தேவை ஏற்படும்போது வேகக் கட்டுப்பாட்டை மீறிச் செல்வது,  ஒருவழிப் பாதையில் செல்வதை பெரிய குற்றமாக நினைக்கவே மாட்டார்கள்.  தன்னால் கண் விழித்து நீண்ட நேரம் ஓட்ட முடியும் என்று தற்பெருமை பேசுபவரும், எத்தகைய சூழலிலும் என்னால் வேகத்தை கட்டுப்படுத்த முடியும் என்று நினைப்பதும்  விபத்துக்கு முக்கிய  காரணமாகிறது.

மனிதர்கள் மட்டும் சரியாக இருப்பது மட்டும் போதாது. வாகனங்களும் சரியான பராமரிப்புடன் இருக்க முடியும். இதையெல்லாம் தாண்டியும் மழை, சகதி, மணல், கல் போன்ற சின்னச்சின்ன விஷயங்களாலும் விபத்துகள் ஏற்படுவதுண்டு. விபத்து நடக்கிறது என்பதற்காக பயணிக்காமல் இருக்கத் தேவையில்லை. வீட்டுக்குள் தவறி விழுந்து செத்தவர்களும் இருக்கவே செய்கிறார்கள். எனவே நம்மால் மாற்ற முடியாத விஷயங்களை ஏற்றுக்கொண்டு நகர்வதே வாழ்வு.

gyaanaguru.com Changed status to publish September 25, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US