ஞானகுரு :
மாபெரும் வெற்றிக்கு ஆசைப்படலாம். அதனை அடைவதற்கு செல்லும் வழி கடுமையானதாக இருந்தாலும், மோசமான தோல்வி கிடைத்தாலும் அதை அனுபவமாக மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வந்துவிட்டால் ஆசைப்படுவது நல்லது. ஒரு சின்ன பிரச்னைக்கே மனம் சுருங்கிவிடும் என்றால் எல்லா ஆசையும் கெட்டதே.
பொதுவாக வியாதி இல்லாத உடலுக்கு நோயாளி ஆசைப்படுகிறான். பணம் வேண்டும் என்று பிச்சைக்காரன் விரும்புகிறான். வெற்றி வேண்டுமென்று தோல்வியாளன் ஆசைப்படுகிறான். அதாவது தன்னிடம் இல்லாத ஒன்றுக்குத்தான் மனிதன் ஆசைப்படுகிறான். உன்னிடம் எது இருக்கிறதோ அதற்காக ஆசைப்படுங்கள். அதுவே நல்லது. இருப்பதைக் கொண்டாடினால் இல்லாததும் வந்துசேரும். ஆம், அதன்பிறகு ஆசையின் மீதும் ஆசை வைக்கும் தகுதி வந்துசேர்ந்துவிடும்.
gyaanaguru.com Changed status to publish
