ஞானகுரு :
இதிகாசங்கள் நல்ல கற்பனைக் கதைகள். அவற்றை ரசிக்கலாமே தவிர நிஜ வாழ்க்கைக்குப் பொருத்திப் பார்க்கக்கூடாது. இதிகாசப்படி கர்ணன் நல்ல நண்பன் அல்ல. நல்ல விசுவாசி என்று தான் சொல்ல வேண்டும்.
சபையில் வைத்து ஒரு பெண்ணின் சேலை உரியப்பட்ட தருணத்தில், அதை தவறு என்று தடுத்து இருந்தால் கர்ணன் நல்ல நண்பன் எனலாம். பஞ்ச பாண்டவர்களுக்கு தனி நாட்டை பிரித்துக்கொடுக்குமாறு துரியோதனனிடம் வற்புறுத்தியிருந்தால் நல்ல நண்பன் எனலாம். குருஷேத்திரப் போரில் கர்ணனுக்கு சல்லியன் சிறந்த நண்பனாக இருந்தான். கர்ணனின் வீரத்தை மதித்து அவனுக்கு தேரோட்டியாக இருக்க சம்மதித்தான். நாகாஸ்திரத்தை அர்ஜுனனின் நெஞ்சுக்கு குறி வைக்கச் சொன்னான், அது தான் வெற்றிக்கு வழி என்று எடுத்துச் சொன்னான். ஆனால், கர்ணன் அதை அலட்சியப்படுத்தியதால் குறி தவறியது. இனி வெற்றி கிட்டாது என்பது தெரிந்ததும் போரில் இருந்து வெளியேறினான் சல்லியன். முகத்துக்கு நேராக தவறுகளை சுட்டிக் காட்டுபவனே நல்ல நண்பன். பாராட்டவும் கொண்டாடவும் மட்டுமே வருபவர்களை நண்பன் என்று நம்பி ஏமாற வேண்டாம்.