ஞானகுரு :
அன்பு, அக்கறை போன்றவை நீங்கள் விதைக்கும் விதையைப் பொறுத்து வளர்கிறது. என்ன விதைக்கிறீர்களோ அதுவே முளைக்கும். நீ ங்கள் எந்த அளவுக்கு உறவுடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கே திரும்பக் கிடைக்கும். அதேநேரம் அன்பு என்பது வாய் வார்த்தைகளில் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.
நிறைய பேருக்கு அன்பு காட்டத் தெரிவதில்லை. அதனால் ஒளிந்துநிற்கு. ‘உன்னைப் பற்றி எனக்கு கவலை இல்லை’ என்று ஒருவர் சொல்கிறார் என்றால், அதன் பின்னே ஓர் அக்கறை இருக்கும். ஒவ்வொரு, ‘சும்மா சொன்னேன்’ என்பதற்குப் பின்னாலும் ஓர் அர்த்தம் இருக்கும். ஒவ்வொரு ‘தெரியாது’ என்பதற்குப் பின்னாலும் தெரிந்தே இருக்கும். எல்லா வெறுப்புகளுக்குப் பின்னாலும் விருப்பும், எல்லா பொய்களுக்குப் பின்னாலும் உண்மையும் கலந்தே இருக்கும். அதனால், நீங்கள் முதலில் மனதை திறந்துவையுங்கள், சிட்டுக்குருவிகள் உள்ளே வரட்டும்.
நிறைய பேர் சகோதரர்கள் இல்லாமல் சகோதரிகள் இல்லாமல் இருக்கிறார்கள். சொந்தம் என்று இருவர் இருப்பதை வரமாகப் பாருங்கள். அதன் மூலம் உதவி கிடைக்குமா என்று தேடினால் ஏமாந்தே போவீர்கள்