ஞானகுரு :
அதிக செல்லம் கொடுப்பது அடம் பிடிக்கும் மனநிலையை குழந்தையிடம் உருவாக்கிவிடும். தான் மட்டுமே முக்கியம், ஸ்பெஷல் என்ற எண்ணமும் குழந்தைக்குத் தோன்றிவிடும். நாளை சந்திக்கபோகும் போட்டி நிறைந்த உலகை ஜெயிப்பதற்கு குழந்தைக்கு அதிக மன பலம் தேவை. அதற்கு நீங்கள் கொடுக்கும் அதீத அன்பு நிச்சயம் தடையாகவே இருக்கும். கேட்டது எல்லாமே கிடைத்துவிடாது என்பது தெரிய வேண்டும்.
எனவே, ஒரு செடி வளரத் தேவையான அளவுக்கு மட்டும் தண்ணீர் விட்டால் போதும். அதிகம் விட்டால் செடி அழுகிவிடும். இருவரும் கண்டிப்பு காட்டவும் வேண்டும், இருவரும் அன்பு செலுத்தவும் வேண்டும். ஒருவர் கண்டிக்கும் நேரத்தில் இன்னொருவர் தலையிடாமல் இருந்தாலே, குழந்தை அடங்கிவிடும்.
gyaanaguru.com Changed status to publish
