Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : இன்று பள்ளிக்கூடத்தில் கற்றுத் தரப்படும் கல்வி முறை மாணவர்களை வெற்றியடைய வைக்குமா.? – எஸ்.சுந்தரராஜன், கன்னியாகுமரி.

210 viewsSeptember 15, 2024
0
gyaanaguru.com September 15, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 15, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 15, 2024 0 Comments

ஞானகுரு :

பள்ளியில் கற்பிக்கப்படும் கல்வி முறையானது  அறிவூட்டம் கொடுப்பதாகவும் அறியாமை அகற்றுவதாகவும் இருக்க வேண்டும். ஆனால், இன்றைய கல்வி முறை வேலைவாய்ப்பை குறிவைத்தே செல்கிறது. மழை, காற்று, வெயில் போன்று சகலருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும். ஆனால், செல்வந்தருக்கு ஒரு கல்வியும், ஏழைகளுக்கு ஒரு கல்வியுமாக இருப்பது பேரபத்தம். எல்லோரையும் ஏற்றிவிட வேண்டிய ஏணி இப்போது கீழே கிடக்கிறது. அதனை தூக்கி எடுத்து மரத்தில் சாய்த்து ஏறுபவர்கள் வெற்றிக் கனியைப் பறிக்கிறார்கள். மற்றவர்கள் வேடிக்கை பார்த்தபடி தாண்டிச் செல்கிறார்கள். உண்மையில்  நல்ல கல்வி முறை, நல்ல கல்விக் கூடம் என்று எதுவுமே இல்லை. நல்ல மாணாக்கன் மட்டுமே உண்டு.  அப்படிப்பட்ட நல்ல மாணவரை உருவாக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

மாணவர்கள் படிக்கிறார்களோ இல்லையோ தவறான வழிகாட்டுதல்களுக்கு ஆளாகாமல் இருந்தாலே போதும். அவர்கள் தப்பிப்பிழைத்துவிடுவார்கள். இன்று பெரும்பாலான பள்ளிகளே பிள்ளைகள் வாழ்க்கையை திசை திருப்புகின்றன. தோல்வியை சொல்லித்தருவதும், முயற்சிக்குப் பயிற்சிவிப்பதுமே முக்கியம். இவற்றைக் கற்றுக்கொண்டால் வெற்றி கிட்டிவிடும். இதை பள்ளிக்கூடம் சொல்லித்தரவில்லை என்றால் பெற்றோராவது கற்றுத்தர வேண்டும்.

gyaanaguru.com Changed status to publish September 15, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US