Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : முதியவர்களை கவனிக்க வேண்டியது யார் பொறுப்பு..? அவர்களும் குழந்தையும் ஒன்றுதானா..? – பி.பாலமுருகன், பாண்டிச்சேரி

276 viewsNovember 18, 2024
0
gyaanaguru.com November 18, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish November 18, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted November 18, 2024 0 Comments

முதுமையினால் உடல்ரீதியில், மனரீதியில், சமூகரீதியில் ஏராளமான பிரச்னைகள் உருவாகின்றன. நினைவுகள் மறந்துபோகிறது. பார்க்கும் திறன், கேட்கும் திறன், பேசும் திறன் குறைகிறது. எப்போதும், எதற்கும் பிறரை சார்ந்து இருக்கும் நிலைமை உருவாகிறது. இப்படித்தான் குழந்தைகளும் இருக்கிறார்கள். ஆனால், குழந்தைகள் எத்தனை தொந்தரவு கொடுத்தாலும் அவர்களை பெற்றோர்கள்  அனாதை ஆசிரமங்களில் விடுவதில்லை.

ஆனால், பெற்றோரை கவனிக்க முடியாமல் சிலர் முதியோர் இல்லத்தில் தள்ளுகிறார்கள். சிலர் தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள். சிலர், அனாதையாக்கி தவிக்கவிடுகிறார்கள். இந்த காலத்தில் மட்டும்தான் இப்படி என்று நினைக்க வேண்டாம். முந்தைய காலத்திலும் கொடூரங்கள் நடந்திருக்கின்றன. ‘தலைக்கோதல்’ என்ற சடங்கை கேள்விப்பட்டிருக்கிறாயா..? முதியவர் தலையில் நிறைய நல்லெண்ணெய் தேய்த்து ஊறவைத்து, தலையில் தண்ணீர் ஊற்றி,  வயிறு நிறைய இளநீர் கொடுத்து இரண்டே நாட்களில் ஜன்னி கண்டு துடிதுடிக்க இறக்க வைத்திருக்கிறார்கள்.

உண்மையில் முதியோரை கவனிக்க வேண்டியது அரசுகளின் பொறுப்பு. பெற்ற பிள்ளைகள் கவனித்தால் நல்லது, கவனிக்கவில்லை என்பது குற்றம் இல்லை.

gyaanaguru.com Changed status to publish November 18, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US