ஞானகுரு :
உயிர் இல்லாத பந்தை கீழே போட்டால், எழும்பி வரும். இரும்பைக் கீழே போட்டால் சப்தம் வரும். கீழே விழுந்த இடம் பாதிப்பு அடையும். ஒவ்வொரு செயலுக்கும் கண்டிப்பாக ஒரு எதிர்வினை இருந்தே தீரும். அண்டை வீட்டுக்காரர் ஒரு பந்து வாங்கிய காரணத்தால், நீங்கள் மனைவியை பிரிய நேரிடலாம் என்பது தெரியுமா?
பக்கத்து வீட்டுக் குழந்தை புதிய பந்தை எடுத்து விளையாட, அது உங்கள் வீட்டு ஜன்னலில் விழுந்து கண்ணாடி உடைய, நீங்கள் அந்த குழந்தையை மிரட்ட, பக்கத்து வீட்டுக்காரன் உங்களைத் திட்ட, பதிலுக்கு உங்கள் மனைவி பக்கத்து வீட்டுக்காரனை கடுமையான வார்த்தைகளால் திட்ட, அவன் உங்கள் மனைவியை அடித்துவிட, அந்த சண்டையை அப்போதைக்கு முடிக்க வேண்டுமென்று நீங்கள் மனைவியை சமாளித்து வீட்டுக்குக் கூட்டி வர, உங்களுடைய கோழைத்தனத்தைக் கண்டு கோபித்துக்கொண்டு மனைவி அம்மா வீட்டுக்குப் போகலாம். உங்கள் சமாதானம் ஏற்கப்படவில்லை என்றால் விவாகரத்து நடக்கலாம். இவை எல்லாமே பட்டர்ஃபிளை எஃபக்ட் என்பார்களே, அது போன்ற தியரி மட்டுமே. இந்த வகையில் உலகில் என்ன செய்தாலும் எதுவும் நடக்க வாய்ப்பு உண்டு எனலாம்.
குழந்தையை அடித்து வளர்க்கக்கூடாது என்பதற்காகவே இப்படி சொல்கிறார்கள். இந்த பூமியில் எல்லோருமே விருந்தாளிகள். ஆகவே, யாருக்கும் வலிக்காமல் வாழ்ந்து பாருங்கள். அவ்வளவுதான்.