ஞானகுரு : நிறைய சேமித்துவிட்டால் வருங்காலத்தில் நிம்மதியாக வாழமுடியும் என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மை என்னவென்றால், இந்த கணத்தில், இந்த நிமிடத்தில், இந்தக் காலத்தில் மகிழ்ச்சியாக வாழத் தெரியாதவர்களால், எந்தக் காலத்திலும் சந்தோஷமாக வாழமுடியாது. எத்தனை சேர்த்துவைத்தாலும் அவருடைய வருங்காலம் அச்சமூட்டுவதாகவே இருக்கும். எதிர்காலம் என்பது கானல் நீர். அதனால் நாளைக்காக காத்திருக்காமல், இந்த நொடியில் மகிழ்வுடன் வாழத் தொடங்குங்கள். அதுவே எதிர்காலத்துக்கும் நல்லது.
gyaanaguru.com Changed status to publish
