ஞானகுரு:
மூளையைவிட வயிறுதான் மனிதனுக்கு முக்கியம். அதனால் தான் வயிறுக்கு உணவு கொடுப்பவரையே தெய்வமாக நினைக்கிறான். தந்தை சம்பாதித்து வந்தாலும் பிள்ளையின் பசி அறிந்து உணவு கொடுப்பவள் பெண் மட்டுமே. அதனலே பிள்ளைகள் அம்மாவை மட்டுமே தேடுகின்றன.
ஆண் என்பவன் வேர்களைப் போன்றவன். மரத்தையும் பூக்களையும் மட்டுமே கொண்டாடும் மக்கள் வேர்கள் நடத்தும் போராட்டத்தை அறிய மாட்டார்கள். தந்தையாக இருப்பதை பெருமையாக ஆண் நினைப்பதால் பாராட்டு பெற நினைப்பதில்லை. அதேநேரம், கணவன் இல்லை என்றாலும் பெண் போராடி பிள்ளையை வளர்த்துவிடுவாள். ஆனால், மனைவி மறைந்துவிட்டால், உடனடியாக மனைவியைத் தேடுவானே தவிர, பிள்ளைக்குத் தாயாக இருக்க பெரும்பாலான தந்தையர் விரும்புவதில்லை. அதனாலே தாய் போற்றப்படுகிறாள்.
gyaanaguru.com Changed status to publish
