ஞானகுரு :
எல்லா காலங்களிலும் மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் வாழ்ந்திருப்பதை வரலாற்றின் பக்கங்களில் பார்க்க முடிகிறது. பெரும்பான்மையாக ஆணும், பெண்ணும் இருப்பதால்… மூன்றாம் பாலினத்தவரையும் மாற்றுத் திறனாளிகளையும் வித்தியாசமாகப் பார்க்கிறோம். ஏதேனும் ஊரில் எல்லா மனிதர்களுக்கும் ஆறு விரல்கள் இருந்தால், அங்கு செல்லும் ஐந்து விரல் மனிதன் மாற்றுத் திறனாளியாகி என்று அழைக்கப்படலாம். அப்படித்தான் மரபணு மாற்றங்களால் எப்படிப் பிறந்தார்களோ, அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வதே மனிதகுலத்துக்கு சிறப்பு.
gyaanaguru.com Changed status to publish
