Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : கூட்டமாகத் தவறு செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்களே, இது நியாயம் தானா..? – பி.கெளதம். கம்பம்.

221 viewsAugust 23, 2024
0
gyaanaguru.com August 23, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 23, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 23, 2024 0 Comments

ஞானகுரு :

நமது ரத்தத்திலே கூட்டத்தின் குற்றம் ஒளிந்திருக்கிறது. தனி நபராக திருடுவதை பெரும் குற்றம் என்ற எண்ணத்தில் இருப்பார். அதே நபர், ஒரு சூப்பர் மார்க்கெட்டை ஒரு கும்பல் சூறையாடுவதையும் பலரும் அங்கிருக்கும் பொருட்களை அள்ளிக்கொண்டு செல்வதையும் பார்த்தால், உடனே உள்ளே நுழைந்து சில பொருட்களை எடுத்துக்கொள்வார். அதை பெருமையாகவும் சொல்வார். இது தான் கும்பல் புத்தி.

இந்த விஷயம் ஏற்கெனவே நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அதாவது அருகருகே இரண்டு ரயில் தண்டவாளங்கள் இருக்கின்றன. ஒன்று கைவிடப்பட்டது என்பதால் அதில் ரயில் வருவதில்லை. அந்த தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக்கொண்டு இருக்கிறது.

அருகே எப்போதும் ரயில் செல்லும் டிராக் இருக்கிறது. அந்த தண்டவாளத்தில் 10 பிள்ளைகள் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது ரயில் வருகிறது.

உங்கள் கையில் ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது என்றால் யாரை காப்பாற்றுவீர்கள் என்று ஒரு கேள்வி 50 நபர்களிடம் கேட்கப்பட்டது.

அத்தனை பேரும் சொன்ன பதில், ஒரு குழந்தை விளையாடிய டிராக்கிற்கு ரயிலை மாற்றுவேன் என்பது தான். அதனால் 10 குழந்தைகள் காப்பாற்றப்படும் என்றார்கள்.

அதாவது, தவறு செய்யாத ஒரு குழந்தையைக் கொல்லலாம். தவறு செய்தாலும் கூட்டமாக இருப்பதால் அந்த கும்பலைக் காப்பாற்றலாம் என்பதே அவர்கள் கூறிய நியாயம். அதனால் தான் ஒட்டுமொத்த கும்பலாகச் சென்று பாபர் மசூதியை உடைத்தவர்கள் கைது செய்யப்படுவதில்லை. ஒட்டுமொத்தமாகச் சென்று ரயிலுக்குத் தீ வைப்பவர்கள் தப்பிக்கிறார்கள். கூட்டமாக இருக்கும் முட்டாள்களை ஒருபோதும் குறைத்து எடை போடாதீர்கள்.

gyaanaguru.com Changed status to publish August 23, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US